மானத்தை கப்பலேற்றிவிட்டது திமுக: இல.கணேசன்
சென்னை:
அமைச்சர் பதவியே தேவையில்லை என்று கூறி வந்த திமுக இப்போது குறிப்பிட்ட இலாகாக்களை கேட்டுபிடிவாதம் செய்ததன் மூலம் அதன் பதவி ஆசை வெட்ட வெளிச்சமாகிவிட்டதாக அகில இந்திய பாஜக செயலாளர்இல.கணேசன் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழகத்திற்கு இதுவரை இல்லாத அளவுக்கு 12 அமைச்சர்கள்கிடைத்துள்ளனர். இது பெரிய விஷயம்தான். கிடைத்த இடங்களை வைத்து பல நன்மைகளை செய்ய தமிழகஅமைச்சர்கள் முன்வர வேண்டும்.
ஆனால் ஆரம்பமே அபசகுனம் போல திமுகவின் செயல்பாடுகள் உள்ளன. நாட்டு நலன் கருதித்தான்ஒவ்வொருவருக்கும் இலாகா ஒதுக்கப்படுகிறது. அப்படி ஒதுக்கப்படுகிற இலாகாக்களை வைத்துக் கொண்டுநாட்டுக்கு என்ன செய்யலாம், மக்களுக்கு எந்த வகையில் சேவை புரியலாம் என்பதை சிந்திக்க வேண்டும்.
அதை விடுத்து இந்த இலாகாதான் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து கேட்டு வாங்குவது நல்லதல்ல. மேலும்,ஒருவருக்கு என்ன இலாகா ஒதுக்க வேண்டும் என்பதை பிரதமர்தான் முடிவு செய்ய வேண்டும். அதை விடுத்துபிரதமர் அல்லாத ஒருவர் இலாகாக்கள் தொடர்பாக உறுதிமொழிக் கடிதம் அளித்தது மரபு மீறிய செயலாகும்.
கப்பல்துறை வேண்டும் கேட்டு கூட்டணி அரசின் மானத்தையே கப்பலேற்றி விட்டார் கருணாநிதி.
நம்ப முடியாத கம்யூனிஸ்டுகளை நம்பி காங்கிஸ் ஆட்சி அமைத்துள்ளது. நம்ப முடியாத காங்கிரஸை நம்பி திமுகஆட்சியில் பங்கேற்றுள்ளது. நம்ப முடியாத திமுகவுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்துள்ளார்கள். இந்தக் கூட்டணிஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்குமா என்பதே இப்போது சந்தேகமாகி விட்டது.
முஸ்லீம் லீக் கட்சிக்கு இதுவரை வெளியுறவுத்துறை ஒதுக்கப்பட்டதில்லை. அவர்களை நம்பி வெளியுறவுத்துறையை ஒதுக்கியிருப்பது நாட்டுக்கு ஆபத்தானது. முஸ்லீம்கள் இப்பதவிக்கு வருவதில் தவறில்லை, ஆனால்முஸ்லீம் லீக் கட்சியை நம்ப கூடாது என்றார் கணேசன்.
-
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications