தமிழர் விடுதலை இயக்க தலைவர் சுப. இளவரசன் அதிரடி கைது: காட்டுப் பகுதியில் சுற்றி வளைப்பு
ஈரோடு:
பல வருடங்களாக தலைமறைவாக இருந்து வந்த தமிழர் விடுதலை இயக்க தலைவர் சுப.இளவரசன் மற்றும்அவரது கூட்டாளியான சகாதேவன் இருவரும் கொளத்தூர் அருகே அதிரடிப்படையினரிடம் நேற்றுநள்ளிரவில் பிடிபட்டனர்.
வீரப்பனைச் சந்திக்கச் சென்று கொண்டிருந்தபோது இவர்கள் பிடிப்பட்டதாக தெரிகிறது.இளவரசன் மீது வீரப்பனுக்கு ஏ.கே. 47 துப்பாக்கிகள் சப்ளை செய்தது, கர்நாடக முன்னாள் அமைச்சர்நாகப்பாவைக் கடத்த வீரப்பனுக்கு உதவியது, காவிரிப் பிரச்சனைக்காக டிவி டவருக்கு குண்டு வைத்தது உள்படபல திகீர் வழக்குகள் உள்ளன.
அரியலூர் அருகே உள்ள வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப. இளவரசன். தமிழர் விடுதலை இயக்கம் என்றநக்சலைட் இயக்கத்தை நடத்தி வருகிறார். தனித் தமிழ்நாடு கோரி வரும் இவருக்கு விழுப்புரம், அரியலூர்,பெரம்பலூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் நடந்த பல குண்டு வெடிப்புகளில் பங்குண்டு.
இவர் மீதும், இவரது கூட்டாளிகள் மீதும் மொத்தம்78 வழக்குகள் உள்ளன. 1999ம் ஆண்டில் கைது செய்யப்பட்டுதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இளவரசன், தண்டனைக் காலம் முடிந்துவெளியே வந்தவுடன் தலைமறைவாகிவிட்டார்.
இந் நிலையில், மலே மாதேஸ்வரா மலைப் பகுதியில் கொளத்தூர் அருகே அடிப்பாலாறு என்ற இடத்தில் சிலரதுநடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து தமிழக அதிரடிப்படை அங்கு முற்றுகையிட்டது.
அப்போது 4 பேர் மறைந்திருப்பதைக் கண்ட படையினர் சுற்றி வளைத்தனர். இதையடுத்து இருவர்தப்பியோடிவிட்டனர்.
சுப. இளவரசனும், அவரது கூட்டாளி சகாதேவன் என்பவரும் அதிரடிப்படையினரிடம் சிக்கினர்.
வீரப்பனை சந்திப்பதற்கான தொடர்புகளை ஏற்படுத்த, சில நாட்களாக இந்தக் காட்டுப் பகுதிக்குள் இவர்கள்தங்கியிருந்ததாகத் தெரிகிறது. இது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து இப் பகுதியை அதிரடிப்படைமுற்றுகையிட்டது.
இந்த இடம் கர்நாடக, தமிழக எல்லையில் காவிரி ஆற்றுப் பகுதியில் உள்ளது. வீரப்பனும் இந்தப் பகுதியில் தான்இருக்க வேண்டும் என அதிரடிப்படை கருதுகிறது. இதையடுத்து அங்கு தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்துவருகிறது. இந்தப் பணியில் கர்நாடக அதிரடிப்படையும் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அதிரடிப்படை தலைவர் விஜயக்குமார் கூறுகையில், அடிப்பாலாரு வனப் பகுதியில் நுழையநான்கு பேர் கொண்ட கும்பல் முயன்றது. இதையடுத்து அதிரடிப்படையினர் அவர்களை நோக்கி சுப்பாக்கியால்சுட்டபடி துரத்தினர். இதில் இளவரசனும், சகாதேவனும் மட்டும் பிடிபட்டனர், 2 பேர் தப்பி விட்டனர்.
சுப இளவரசன் மற்றும் சகாதேவனிடமிருந்து துப்பாக்கிகள், குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார்.
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை அவரது வீட்டில் இருந்து கடத்திச் செல்ல 4 பேரை வீரப்பனுடன்அனுப்பி வைத்து உதவியதாக இளவரசன் மீது ஒரு வழக்கு உள்ளது. கடைசியில் நாகப்பா கொலை செய்யப்பட்டுகாட்டில் கிடந்தது நினைவுகூறத்தக்கது.
இந்த நால்வரில் ஒருவர் ஏற்கனவே அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து தமிழக காவல்துறை டிஜிபி கோவிந்த் நிருபர்களிடம் பேசுகையில், பல ஆண்டுகளாகத் தேடப்பட்டுவந்த இளவரசன் பிடிபட்டுள்ளார். அவரிடம் இருந்து 3 துப்பாக்கிகள், குண்டுகள், 36 கையெறி குண்டுகள், ஒருபைனாகுலர் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இளவரசன் மற்றும் சகாதேவன் மீது கொலை முயற்சி, ஆயுதத் தடுப்புப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ள என்றார்.
முதலில் தமிழ்நாடு விடுதலைப் படையில் இருந்த இளவரசன் பின்னர் தமிழ்நாடு விடுதலை இயக்கத்தை தனியாரஆரம்பித்து இயங்கி வந்தார். தலைமறைவாக காட்டுப் பகுதியில் இருந்தபோது வீரப்பனுடன் தொடர்பைஏற்படுத்திக் கொண்டார்.
இன்று கோர்ட்டில் ஆஜர்:
சுப.இளவரசனும், கூட்டாளி சகாதேவனும் இன்று மாலை மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.பின்னர் இருவரும் திம்மம் கிளைச் சிறையில் அடைக்கப்படுவார்கள் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஊத்தங்கரையில் நக்சலைட் கைது:
இதற்கிடையே, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கிருஷ்ணன் என்ற நக்சலைட் கைது செய்யப்பட்டார்.அவரிடமிருந்து 1.5 கிலோ வெடிபொருட்கள், 2 துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இப் பகுதியில் கடந்த ஆண்டு மிகப் பெரும் நக்சலைட் வேட்டை நடந்தது. அதில் சிவா என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். 26 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டனர், 7 பேர் தப்பி விட்டனர்.
இதில் சிலர் நாட்டரசம்பட்டி பகுதிக்கு வந்து செல்வதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து போலீஸார்வீடுகளில் சோதனை நடத்தியபோது கிருஷ்ணன் பிடிபட்டார்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications