திமுக வசம் உள்துறை: கிலியில் அதிமுக
டெல்லி - சென்னை:
மத்திய அமைச்சரவையில் நிதித்துறையின் வருவாய்த்துறையும், உள்துறையின் உள்நாட்டுப்பாதுகாப்புத்துறை, பெர்சனல் துறையும் திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது அதிமுக வட்டாரத்தில்பெரும் கிலியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இரு துறைகளையும் வைத்து மாநில அரசுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் தனிப்பட்டமுறையிலும் திமுகவால் பல வழிகளிலும் நெருக்குதல் தர முடியும்.
பழனி மாணிக்கத்துக்கு நிதித்துறை இணையமைச்சர் பதவியோடு வருமான வரித்துறை, சுங்கத்துறை, அன்னியசெலவாணி மோசடிகளைக் கண்காணிக்கும் அமலாக்கப் பிரிவு ஆகியவை அடங்கிய வருவாய்த்துறைஒதுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா, சசிகலா மீது வருமான வரி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்குகளும்,சசிகலாவின் அக்காள் மகன் தினகரன் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்குகளும், வெளிநாட்டில் இருந்துவிலை உயர்ந்த கார் இறக்குமதி செய்த வழக்கும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல நடராஜனின் தோழி ஜனனியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான பணம் யாருக்குச்சொந்தமானது என்ற விவகாரமும் கிளறப்படும். ஏற்கனவே, இது தொடபாக வருமான வரித்துறை வழக்குப் பதிவுசெய்துள்ளது.
அமலாக்கப் பிரிவையும், வருமான வரித்துறையையும் கையில் வைத்திருக்கும் திமுக இனி முதல்வர்ஜெயலலிதாவின் தூக்கத்தை நிச்சயம் கெடுக்கும்.
இந்தத் துறையின் கேபினட் அமைச்சரான ப.சிதம்பரம், திமுக- அதிமுக அரசியலில் சிக்கிக் கொள்ளாமல்தவிர்க்கவே, இத் துறையை பழனி மாணிக்கத்துக்குத் தர வேண்டாம் என சோனியாவிடம் கூறி தடுக்க முயன்றதாகத்தெரிகிறது.
இதனால் தான் பழனி மாணிக்கத்துக்கு வர்த்தகம் மற்றும் தொழில்துறையை பிரதமர் மன்மோகன் சிங் ஒதுக்க,பொங்கியெழுந்துவிட்டார் கருணாநிதி.
இந்த விஷயத்தில் சிதம்பரத்துக்கு பெரும் பங்குள்ளதை உணர்ந்த கருணாநிதி, அதை நேரடியாகவே மன்மோகன்சிங்கிடம் கூறி, தனது கோபத்தை வெளிப்படுத்தியதாகத் தெரிகிறது.
கருணாநிதி பெயருக்கு மிரட்டவில்லை, நிச்சயமாக அமைச்சரவையில் இருந்து வெளியேறுவார் என்பதை உணர்ந்தபிறகே திமுக கேட்பதைக் கொடுத்துவிடும் முடிவுக்கு காங்கிரஸ் வந்தது.
அதே நேரத்தில் ஜெயலலிதா விஷயத்தில், திமுகவின் நடவடிக்கைகளைப் பார்த்த பின் பழனி மாணிக்கத்துக்கு,சிதம்பரம் கிடுக்கிப்பிடி போட வாய்ப்புள்ளது. சிதம்பரத்தின் உறவினர்களான தமிழகத்தின் மிக முக்கியதொழிலதிபர் குடும்பத்துக்கும் ஜெயலலிதாவுக்கும் உள்ள அண்டர்ஸ்டான்டிங் உலகறிந்தது.
தனக்கெதிராக திமுக காய் நகர்த்தினால், தொழிலதிபர் குடும்பம் மூலமாக சிதம்பரம் உதவியால் மூலமாக பழனிமாணிக்கத்தை கட்டுப்படுத்த ஜெயலலிதா முயலலாம். இதனால் எதிர்காலத்தில் சிதம்பரம்- திமுக மோதல்வெளிப்படையாக வெடிக்க நிறையவே வாய்ப்புண்டு.
ரகுபதி கையில் சிபிஐ, ஐ.பி:
அதே போல உள்துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ரகுபதிக்கு, கருணாநிதி கோரியபடி உள்நாட்டுப்பாதுகாப்பு மற்றும் பெர்சனல் துறை ஒதுக்கப்பட்டுவிட்டது.
முதலில் உள்துறை என பொத்தம்பொதுவாகக் கூறப்பட, கடுப்படைந்த கருணாநிதி உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும்பெர்சனல் துறையை ஒதுக்கியே ஆக வேண்டும் என போர்க் கொடி உயர்த்தி, அதை வாங்கியும்விடடார்.
அப்படி என்ன தான் இருக்கிறது பெர்சனல் துறையில்?
பெர்சனல் துறையின் கீழ் தான் சிபிஐயின் நிர்வாகக் கட்டுப்பாடு இருக்கிறது. மேலும் மத்திய உளவுப் பிரிவானஐபியின் தகவல் பரிமாற்றத்தில் உள்நாட்டுப் பாதுகாப்புத்துறைக்கு முக்கிய இடமுண்டு.
இதனால் ஐ.பிக்குக் கிடைக்கும் ரகசிய தகவல்களை ரகுபதி தெரிந்து கொள்ள முடியும். மேலும் பொடா சட்டத்தைரத்து செய்வதில் தீவிரமாக உள்ள திமுகவுக்கு உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை பேருதவியாக உதவியாக இருக்கும்.
அதே போல டி.ஆர். பாலுவுக்கு உறுதிளிக்கப்பட்டபடி நெடுஞ்சாலைத்துறையோடு, கப்பல் போக்குவரத்துத்துறையும் இணைந்த தரைவழிப் போக்குவரத்துத் துறை வழங்கப்பட்டுவிட்டது.
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற கப்பல் போக்குவரத்துறை பெரும் உதவியாக இருக்கும் என்பதால் தான்அதை கேட்டுப் பெற்றதாக திமுக கூறியுள்ளது.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications