பொடா சட்டம் நீக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி:
பொடா சட்டம் ரத்து செய்யப்படும், தனியார் துறையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீட்டைஅமல்படுத்துவது குறித்து விவாதம் நடத்தப்படும் என காங்கிரஸ் கூட்டணி அரசு வெளியிட்டுள்ளகுறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
கூட்டணிக் கட்சிகள் இணைந்து செயல்பட இந்த செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனைபிரதமர் மன்மோகன் சிங் இன்று வெளியிட்டார்.
அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
தவறாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பொடா சட்டம் நீக்கப்படும்.
லாபம் ஈட்டும் பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க மாட்டோம். தனியார்மயமாக்கலைஒரு கொள்கையாக அமல்படுத்த மாட்டோம். தேவையான துறை
மக்களவை, சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வருவோம்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்துதேசிய அளவில் விவாதம் தொடங்கப்படும்.
அடுத்த பத்தாண்டுகளுக்கு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 முதல் 8 சதவீதமாக தொடர்ந்துவைத்திருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
வேலைவாய்ப்புக்களை அதிக அளவில் உருவாக்கும் வகையில் முதலீடுகள் கொண்டு வரப்படும்.முறைப்படுத்தப்படாத தொழில்துறைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு நலத் திட்டங்கள்அறிமுகப்படுத்தப்படும்.
ஒதுக்கப்பட்டுக் கிடக்கும் விவசாயத்துறைக்கும், சிறுதொழில்துறைக்கும் அதிக முக்கியத்துவம்தரப்படும்.
பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் நலன்களைப் பாதுகாப்போம். ஊழல் இல்லாத அரசைவழங்குவோம். வேலை வாய்ப்புக்களில் பெண்களுக்கு சம உரிமை கிடைக்கச் செய்யப்படும்.
நாட்டின் மதச் சார்பின்மையைக் கட்டிக் காப்போம். இதில் யாருடைய நெருக்குதலுக்கும் அரசுபணியாது. ராமர் கோவில் விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை அனைத்துத் தரப்பினரும் ஏற்று நடக்கவேண்டும். அதே நேரத்தில் பேச்சு நடத்தி பிரச்சனையைத் தீர்க்க விரும்பினால் அரசு உதவும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியோடு, சமூக வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் தரப்படும்.
இவ்வாறு பொது செயல் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
-
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications