இந்தியா ஒளிர்கிறது கோஷத்தால் தோற்றோம்: அத்வானி
டெல்லி:
இந்தியா ஒளிர்வதாகவும், பீல் குட் நிலவுவதாகவும் செய்த பிரச்சாரம் தான் பாஜகவின் தோல்விக்குமுக்கியக் காரணம் என முன்னாள் துணை பிரதமர் அத்வானி கூறியுள்ளார்.
ஆட்சியும், பதவியும் பறிபோன பின் ஆழ்ந்த மெளனத்தில் இருந்த அத்வானி, இப்போது தான்அதைக் கலைத்திருக்கிறார். இன்று நிருபர்களை சந்தித்த அவர்,
இந்தத் தோல்வியை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மக்களின் ஆதரவைப் பெறத் தவறிவிட்டோம்.அதே நேரத்தில் எந்த ஒரு தனி நபருக்கோ, அல்லது கூட்டணிக்கோ ஆதரவாக மக்கள்வாக்களிக்கவில்லை. இது ஒரு பிளவுபட்ட தீர்ப்பு.
இப்படிப்பட்ட பிளவுபட்ட தீர்ப்பை மக்கள் தருவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.இப்போது ஆட்சியில் இருப்பவர்களும் (காங்கிரஸ் கூட்டணி) நிச்சயம் எதிர்பார்த்திருக்காது.
அனைத்துத் தரப்பினரின் ஒருமித்த கருத்தையும் ஏற்றுத்தான் அரசு செயல்பட வேண்டும் என்று தான்மக்களின் தீர்ப்பு சொல்கிறது. இதை இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் உணர்ந்து ஆள்வதுநல்லது.
இந்தியா ஒளிர்கிறது, பீல் குட் போன்ற வார்த்தைகளை வைத்து நாங்கள் செய்த பிரச்சாரம்எங்களுக்கு எதிராகப் போய்விட்டது. கடந்த 6 ஆண்டுகளில் வாஜ்பாய் அரசு செய்த சாதனைகளைவைத்துத் தான் அப்படி பிரச்சாரம் செய்தோம்.
ஆனால், இதற்கு எதிராக எதிர்மறை பிரச்சாரத்தில் எதிர் கட்சிகள் ஈடுபட்டன. நாட்டின் எல்லாகேடுகளுக்கும் பா.ஜ.க. தான் காரணம் என பொய் பிரச்சாரம் செய்தனர். எங்களது ஆக்கப்பூர்வமாகபிரச்சாரத்துக்கு எதிரான எதிர்மறை பிரச்சாரம் வென்றுவிட்டது.
பா.ஜ.கவுக்கு எதிராக செய்யப்பட்ட பிரச்சாரம் நாட்டுக்கு எதிராக செய்யப்பட்ட பிரசாரமாகும்.
மத்திய அரசின் சாதணைகளை வைத்து ஓட்டு கேட்டோம். ஆனால், மாநிலங்களின் உள்ளூர்பிரச்சனைகள் இந்த சாதனைகளை மறக்கடித்துவிட்டன.
இனி நாங்கள் சிறந்த எதிர்க் கட்சியாக செயல்படுவோம். அடுத்த மாதத்தில் பா.ஜ.க. செயற்குழு கூடிதோல்விக்கான காரணத்தை முழுமையாக ஆராயும். இந்தத் தோல்வி தாற்காலிகமானது தான்.பா.ஜ.கவின் எதிர்காலம் மிக பிரகாசமாகவே உள்ளது.
1984ம் ஆண்டில் வெறும் 2 இடங்களில் தான் வென்றோம். அடுத்து ஆட்சியைப் பிடித்தோம். அதுபோல மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வருவோம்.
தமிழகம், ஆந்திராவில்...
தமிழகத்திலும், ஆந்திராவிலும் அம் மாநில அரசுகள், முதல்வர்கள் மீதான மக்களின் வெறுப்பு அதிக அளவில்இருந்ததால் பாஜக கூட்டணிக்கு படுதோல்வி கிடைத்தது.
மோடிக்கு எதிராக 60 எம்.எல்.ஏக்கள்:
இதற்கிடையே குஜராத் பா.ஜ.க. முதல்வர் நரேந்திர மோடியை பதவி நீக்கம் செய்யக் கோரி 60 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
மொத்தமுள்ள 127 எம்.எல்.ஏக்களில் 60 பேர் அவரை நீக்கக் கோரியுள்ளதால், மோடி பதவியில் நீடிப்பது சிரமமாகவேகருதப்படுகிறது.
இது குறித்து அத்வானி கூறுகையில், அதிருப்தி அடைந்துள்ள எம்.எல்.ஏக்களுடன் பேசி வருகிறோம் என்றார்.
மக்களவைத் தேர்தலில் குஜராத்தில் பா.ஜ.க. தோல்வியைத் தழுவியதால் மோடியை ராஜினாமா செய்ய வைக்க அத்வானிமுயன்று வருவது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications