ஜெ. ஆலோசனை: ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்?
சென்னை:
தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா இன்றுமுக்கிய ஆலோசனை நடத்தினார்.
இன்று காலை கோட்டையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜெயலலிதாவுடன் தலைமைச் செயலாளர்லட்சுமி பிரானேஷ், உள்துறை செயலாளர் முனீர் ஹோதா, நிதித்துறைச் செயலாளர் நாராயணன், பொதுத்துறைச்செயலாளர் பிச்சாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர். காலை 11.30 மணிக்குத் தொடங்கிய இந்த ஆலோசனைமதிய உணவுக்குப் பிறகும் தொடர்ந்தது.
அடுத்த மாதம் தொடங்கும் சட்டசபை கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட வேண்டிய மானிய கோரிக்கைகள்பற்றி விவாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் வட்டாரங்கள் கூறின. ஆனால் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பணி மாற்றம் பற்றியே இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கோட்டைவட்டாரங்கள் கூறின.
இதற்கிடையே அமைச்சர்கள் மாற்றம் பற்றியும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. மாநில ஆளுநர் ராம்மோகன்ராவ் வெளியூர் பயணத்தில் இருப்பதால் அவர் வந்த பின்னர்தான் அமைச்சரவை மாற்றம் குறித்து தெரிய வரும்.


Click it and Unblock the Notifications
