பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்தால் ஜக்குபாய் ஓடும்: ராமதாஸ்
சென்னை:
தமிழகத்திற்குக் கிடைத்துள்ள 12 மத்திய அமைச்சர்களின் சேவைகளையும் முதல்வர் ஜெயலலிதா சரியாகபயன்படுத்திக் கொண்டு தமிழக நலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர்ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
அதிமுக அரசைக் கலைத்தால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மக்களிடையே அனுதாப அலை ஏற்படும்.எனவே அரசைக் கலைக்கும்படி மத்திய அரசை இப்போது கோரமாட்டோம்.
தமிழகத்திற்கு இதுவரை இல்லாத அளவுக்கு 12 மத்திய அமைச்சர்கள் கிடைத்துள்ளனர். டெல்லியில் தமிழகத்தின்கை ஓங்கிவிட்டது, குரல் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. தமிழகத்தின் கோரிக்கைகள் தான் பெரும்பாலும்குறைந்தபட்ச செயல் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த சூழ்நிலையை தமிழக அரசு சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தனது போக்கை மாற்றிக்கொள்ள ஜெயலலிதா தவறினால் தமிழகத்திற்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பை இழக்க நேரிடும்.
வீராணம் போன்ற உருப்படாத திட்டத்தில் பணத்தை வீணடிப்பதை விட்டுவிட்டு கடல் நீரை குடிநீராக்கும்திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். இந்தத் திட்டமும் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் சேர்க்கப்பட்டுவிட்டது.
காங்கிரஸ், திமுக மற்றும் மதிமுக ஆகியவற்றுடன் இணைந்து தமிழக நலனுக்காக பா.ம.க. பாடுபடும். எங்களதுமுழுக் கவனமும் இப்போது இதில்தான் உள்ளது.
மத்திய அமைச்சர்களைச் சந்திக்க ஜெயலலிதாவால் முடியவில்லை என்றால் தலைமைச் செயலருக்கு இணையானஉயர் அதிகாரி ஒருவரை நியமித்து, மத்திய அமைச்சர்களுடன் நல்லுறவை வலுப்படுத்த வேண்டும். இதன் மூலம்தமிழக அரசின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும்.
பாரபட்சமற்ற முறையில் காவிரி நீர் பங்கீடு செய்யப்பட வேண்டும் என்று இந்த விஷயத்தில் பாதிப்படைந்துள்ளமாநிலங்கள் அனைத்தும் விரும்புகின்றன. எனவே இந்த வருட விவசாயத்துக்கு காவிரி நீர் தமிழகத்துக்குக்கிடைக்கும் என்றும் நம்புகிறோம்.
மேலும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு விரைவில் வெளியிடப்பட வேண்டும் என்று பா.ம.கவிரும்புகிறது.
தேர்தல் படுதோல்விக்குப் பிறகு மக்கள் விரோத நடவடிக்கைகளை திரும்பப் பெற்றுக் கொண்டது போல, சாலைப்பணியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள தமிழக அரசு நடவடிக்கைஎடுக்க வேண்டும்.
கிராமப் புறங்களில் திறக்கப்பட்டுள்ள மதுக் கடைகளை உடனடியாக மூட வேண்டும். இல்லாவிட்டால் அதைநாங்களே பூட்டுவோம். அந்த போராட்டத்தில் நானே இறங்குவேன்.
இனிமேலாவது கீழ்த்தரமான அரசியலை எல்லாம் விட்டுவிட்டு முதல்வர் ஜெயலலிதா நாகரீகமாக நடந்துகொள்ள வேண்டும். எதிர்க் கட்சியினரை வாய்க்கு வந்தபடி பேசுவைதயெல்லாம் நிறுத்த வேண்டும்.
தேர்தலில் ரஜினியை மக்கள் நிராகரித்திருக்கிறார்கள். அது முடிந்த போன பிரச்சனையாக பா.ம.க. நினைக்கிறது.இப்போது அவர் அவரது தொழிலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அதில் அவர் வெற்றி பெற வாழ்த்துகிறேன். பூர்வ ஜென்ம புண்ணியம் அவருக்கு சிறிதளவாவது இருந்தால் அந்தபுதிய படம் (ஜக்குபாய்) ஓடும். படம் ஓடாவிட்டால் புண்ணியம் தீர்ந்துவிட்டது என்று அர்த்தம் என்றார் ராமதாஸ்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம்












Click it and Unblock the Notifications