தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து, சென்னைக்கு புதிய குடிநீர் திட்டம்: மத்திய அரசு உறுதிமொழி
டெல்லி:
திமுக, பாமக மதிமுக ஆகிய கட்சிகளின் கோரிக்கையை ஏற்று தமிழுக்கு செம்மொழி அந்தஸ்துவழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கூட்டணி அரசின் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் இந்த உறுதிமொழி தரப்பட்டுள்ளது.அதே போல சேது சமுத்திரத் திட்டத்தை விரைவில் நிறைவேற்றவும், சென்னையின் குடிநீர்பிரச்சனையைப் போக்க கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை அமலாக்கவும்உறுதியளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இந்தியா ஆக்கப்பூர்வமான பங்களிக்கும் என்றும்கூறப்பட்டுள்ளது.
இந்த செயல் திட்டத்தை உருவாக்கியதில் தமிழகத்தைச் சேர்ந்த 3 கட்சிகளுக்கும் முக்கிய பங்குண்டுஎன்பது குறிப்பிடத்தக்கது.
செயல் திட்டத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
உலகின் மூத்தமொழிகளில் ஒன்றான தமிழுக்கு செம்மொழி (கிளாசிகல் லாங்வேஜ்) அந்தஸ்துவழங்கப்படும். இது தவிர அனைத்து இந்திய மொழிகளையும் மத்திய அரசின் ஆட்சி மொழிகளாகஅறிவிப்பது குறித்து ஆராய குழு அமைக்கப்படும்.
(இதன்மூலம் தமிழ் வளர்ச்சிக்கு மத்திய அரசின் நிதியுதவி கிடைக்கும். தேசிய அளவில்பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தமிழைப் பயிற்றுவிக்க பிரிவுகள் ஏற்படுத்தப்படும்)
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சேது சமுத்திரத் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கைஎடுக்கப்படும்.
(இதனால் வங்கக் கடலில் இருந்தும், இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் இருந்தும், அரபிக்கடலுக்கு செல்லும் கப்பல்கள் இலங்கையை சுற்றிக் கொண்டிருக்காமல் பாக் ஜலசந்தி வழியாகசெல்ல முடியும்.
இதனால் தூத்துக்குடி துறைமுகம் மாபெரும் வளர்ச்சி அடையும். கப்பல்கள் மூலமான வரி பெருகும்,கப்பல்கள் சார்ந்த தொழில்கள் அதிகரிக்கும், தமிழகம் வழியான ஏற்றுமதி, இறக்குமதியும்அதிகரித்து, அதைச் சார்ந்த தொழில்களும் வளரும்)
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அந் நாட்டின் ஒற்றுமை மற்றும்இறையாண்மை பாதிக்கப்படாத வகையிலும், அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்தியாஆக்கப்பூர்வமான பங்களிப்பை அளிக்கும் என்றும் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் உறுதிஅளிக்கப்பட்டுள்ளது.
மதிமுகவின் நெருக்குதலால் இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் காவிரிப் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications