அமைதி பேச்சுவார்த்தையில் மோதல், ஒருவர் கொலை: கமுதியில் பதற்றம்
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இரு தரப்பினருக்கு இடையே நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில்மோதல் ஏற்பட்டு ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் கமுதி சுற்றுவட்டாரத்தில் பரபரப்புநிலவுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளது ஒத்தப்புலி கிராமம். இந்தக் கிராமத்திற்கு அருகே உள்ளதுநல்லான்குளம் கிராமம், இது விருதுநகர் மாவட்டம் பரளச்சி காவல் நிலைய எல்லைக்குள் வருகிறது.
இரு கிராம மக்களும் அடிக்கடி பல்வேறு காரணங்களுக்காக மோதிக் கொள்வது வழக்கம். இந் நிலையில்ஒத்தப்புலி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், நல்லான்குளம் செல்லும் பேருந்தில் பயணித்தார். குடிபோதையில் இருந்தஅவர், நல்லான்குளத்தைச் சேர்ந்த இருவரிடம் தகராறு செய்துள்ளார்.
இது பெரிய மோதலாகி இரு கிராமத்தினரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதைத் தொடர்ந்துநல்லான்குளம் கிராமத்து பஞ்சாயத்தைக் கூட்டி இரு தரப்பினருக்கும் இடையே அமைதி ஏற்படுத்த முடிவாகியது.
ஒத்தப்புலியைச் சேர்ந்த சிலர் நல்லான்குளம் பஞ்சாயத்திற்கு வந்தனர். கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது,திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் மூண்டது. இதில் நல்லான்குளத்தைச் சேர்ந்த ராமு என்பவர்வெட்டப்பட்டார். சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.
இதையடுத்து நல்லான்குளத்தைச் சேர்ந்தவர்கள் ஒத்தப்புலி கிராமத்திற்குச் சென்று அங்குள்ள குடிசைகளுக்குத்தீவைத்தனர்.
தகவல் அறிந்துதம் டிஐஜி அலெக்சாண்டர் மோகன் தலைமையில் போலீஸ் படை விரைந்து வந்தது. இருகிராமங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்குக் குவிக்கப்பட்டனர்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications