காவிரி நீர்: மன்மோகனுக்கு கருணாநிதி வேண்டுகோள்சென்னை:முன்னாள் பிரதமர் வி.பி.சிங் தமிழக காவிரி விவசாயிகளைக் காப்பாற்றியது போல, இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கும் தமிழக விவசாயிகளின் வாழ்க்கையைக் காக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.திமுக தலைவர் கருணாநிதியின் முத்து விழாவையொட்டி சென்னை தீவுத் திடலில் பிறந்த நாள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் வி.பி.சிங், மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.தலைவர்களின் பாராட்டுக்குப் பிறகு கருணாநிதி ஏற்புரை நிகழ்த்தினார். காவிரிப் பிரச்சினை தொடர்பாக அவர் விரிவாகப் பேசினார். கருணாநிதி பேசுகையில், காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் நிலை மோசமாகி வருகிறது. இந்த நேரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் உடனடியாக தலையிட வேண்டும்.காவிரி நீர் ஆணையத்தைக் கூட்டி தமிழகத்திற்கு உரிய நீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதேசமயத்தில், கர்நாடக விவசாயிகளின் வாழ்க்கையை பலி கொடுத்து விட்டு தமிழகத்திற்கு நீர் கொடுக்க வேண்டும் என்று நான் கோரவில்லை. இரு தரப்பு விவசாயிகளுக்கும் பலன் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வற்புறுத்துகிறேன்.வி.பி.சிங் பிரதமராக இருந்தபோதுதான், காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அதுதான் அப்போது தமிழக காவிரி விவசாயிகளைக் காத்தது. நடுவர் மன்றம் மட்டும் அமைக்கப்பட்டிருக்காவிட்டால், இந்நேரம் காவிரிப் பாசனப் பகுதி பாலைவனமாகி இருக்கும். விவசாயிகள் பெரும் பஞ்சத்தில் சிக்கியிருப்பார்கள்.வி.பி.சிங் போல மன்மோகன் சிங்கும் உடனடியாக செயல்பட்டு காவிரி விவசாயிகளைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வாஜ்பாய் பிரதரமாக இருந்தபோதும் காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயன்றார். ஆனால் திமுகவுக்குப் பிறகு வந்த தமிழக ஆட்சியாளர்கள் வாஜ்பாய்க்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.திமுகவின் வற்புறுத்தலின்பேரில் காவிரி நீர் ஆணையத்தை வாஜ்பாய் அமைத்தார். இந்த ஆணையத்தை அதிகாரம் இல்லாதது, பல் இல்லா பாம்பு என அதிமுக தலைமை விமர்சனம் செய்து பிரச்சினைக்குத் தீர்வு காண வாஜ்பாய்க்கு ஒத்துழைக்கவில்லை என்றார் கருணாநிதி.
சென்னை:
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் தமிழக காவிரி விவசாயிகளைக் காப்பாற்றியது போல, இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கும் தமிழக விவசாயிகளின் வாழ்க்கையைக் காக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் முத்து விழாவையொட்டி சென்னை தீவுத் திடலில் பிறந்த நாள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் வி.பி.சிங், மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தலைவர்களின் பாராட்டுக்குப் பிறகு கருணாநிதி ஏற்புரை நிகழ்த்தினார். காவிரிப் பிரச்சினை தொடர்பாக அவர் விரிவாகப் பேசினார். கருணாநிதி பேசுகையில், காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் நிலை மோசமாகி வருகிறது. இந்த நேரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் உடனடியாக தலையிட வேண்டும்.
காவிரி நீர் ஆணையத்தைக் கூட்டி தமிழகத்திற்கு உரிய நீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதேசமயத்தில், கர்நாடக விவசாயிகளின் வாழ்க்கையை பலி கொடுத்து விட்டு தமிழகத்திற்கு நீர் கொடுக்க வேண்டும் என்று நான் கோரவில்லை. இரு தரப்பு விவசாயிகளுக்கும் பலன் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வற்புறுத்துகிறேன்.
வி.பி.சிங் பிரதமராக இருந்தபோதுதான், காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அதுதான் அப்போது தமிழக காவிரி விவசாயிகளைக் காத்தது. நடுவர் மன்றம் மட்டும் அமைக்கப்பட்டிருக்காவிட்டால், இந்நேரம் காவிரிப் பாசனப் பகுதி பாலைவனமாகி இருக்கும். விவசாயிகள் பெரும் பஞ்சத்தில் சிக்கியிருப்பார்கள்.
வி.பி.சிங் போல மன்மோகன் சிங்கும் உடனடியாக செயல்பட்டு காவிரி விவசாயிகளைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாஜ்பாய் பிரதரமாக இருந்தபோதும் காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயன்றார். ஆனால் திமுகவுக்குப் பிறகு வந்த தமிழக ஆட்சியாளர்கள் வாஜ்பாய்க்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.
திமுகவின் வற்புறுத்தலின்பேரில் காவிரி நீர் ஆணையத்தை வாஜ்பாய் அமைத்தார். இந்த ஆணையத்தை அதிகாரம் இல்லாதது, பல் இல்லா பாம்பு என அதிமுக தலைமை விமர்சனம் செய்து பிரச்சினைக்குத் தீர்வு காண வாஜ்பாய்க்கு ஒத்துழைக்கவில்லை என்றார் கருணாநிதி.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications