கர்நாடக முதல்வரை சந்திக்கிறது திமுக கூட்டணி குழுசென்னை:காவிரியில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடக் கோரி கர்நாடக முதல்வர் தரம்சிங்கை சந்தித்துக் கோரிக்கை விடுக்க திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் உயர் மட்டக் குழு வரும் 10ம் தேதி கர்நாடகம் செல்கிறது.அதே போல இக் கூட்டணியின் எம்.பிக்கள் 40 பேரும் வரும் 7 அல்லது 8ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்து தமிழகத்துக்குக் காவிரி நீர் கிடைக்கச் செய்யுமாறு கோரிக்கை விடுக்கவுள்ளனர்.தரம் சிங்கை சந்திக்கச் செல்லும் குழுவுக்கு முன்னாள் பொதுப் பணித்துறை அமைச்சரும் திமுக தலைமைக் நிலையச் செயலாளருமான துரைமுருகன் தலைமை வகிப்பார்.இந்த உயர் மட்டக் குழுவில் தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன், மார்க்சிஸ்ட் தலைவர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.பியான காதர் மொய்தீன் ஆகியோரும் பங்கேற்று பெங்களூர் செல்கின்றனர்.இத் தகவலை திமுக தலைவர் கருணாநிதி இன்று நிருபர்களிடம் தெரிவித்தார். முன்னதாக காவிரிப் பிரச்சினை குறித்து கருணாநிதி தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று காலை நடந்தது. அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடந்த இக் கூட்டத்தில் காவிரி பாசனப்பகுதி விவசாயிகளின் பிரச்சினை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.கர்நாடக முதல்வர் தரம்சிங்கை சந்தித்துப் பேசுவது என இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 10ம் தேதி பெங்களூரில் இச் சந்திப்பு நடக்கவுள்ளது.அதே போல 7 அல்லது 8ம் தேதி தமிழக, பாண்டிச்சேரியைச் சேர்ந்த 40 எம்.பிக்களும் கூட்டாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து காவிரியில் நீரைத் திறந்துவிடக் கோருவர் என்றார் கருணாநிதி.காவிரி நீரைப் பெற இது முதல்படி என்ற கருணாநிதி, காவிரி விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு ஜனநாயக முற்போக்குக் கூட்டணி மேற்கொள்ளும் இந்த முயற்சிக்கு அதிமுக அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், அதிமுகவும் இக் குழுவில் பங்கேற்க வேண்டும்.காவிரி ஆணையத்தைக் கூட்டக் கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். அதிமுக அரசு இப்போதாவது விழித்துக் கொண்டுள்ளது மகிழ்ச்சி தருகிறது என்றார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காவிரியில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடக் கோரி கர்நாடக முதல்வர் தரம்சிங்கை சந்தித்துக் கோரிக்கை விடுக்க திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் உயர் மட்டக் குழு வரும் 10ம் தேதி கர்நாடகம் செல்கிறது.

அதே போல இக் கூட்டணியின் எம்.பிக்கள் 40 பேரும் வரும் 7 அல்லது 8ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்து தமிழகத்துக்குக் காவிரி நீர் கிடைக்கச் செய்யுமாறு கோரிக்கை விடுக்கவுள்ளனர்.

தரம் சிங்கை சந்திக்கச் செல்லும் குழுவுக்கு முன்னாள் பொதுப் பணித்துறை அமைச்சரும் திமுக தலைமைக் நிலையச் செயலாளருமான துரைமுருகன் தலைமை வகிப்பார்.

இந்த உயர் மட்டக் குழுவில் தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன், மார்க்சிஸ்ட் தலைவர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.பியான காதர் மொய்தீன் ஆகியோரும் பங்கேற்று பெங்களூர் செல்கின்றனர்.

இத் தகவலை திமுக தலைவர் கருணாநிதி இன்று நிருபர்களிடம் தெரிவித்தார். முன்னதாக காவிரிப் பிரச்சினை குறித்து கருணாநிதி தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று காலை நடந்தது. அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடந்த இக் கூட்டத்தில் காவிரி பாசனப்பகுதி விவசாயிகளின் பிரச்சினை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

கர்நாடக முதல்வர் தரம்சிங்கை சந்தித்துப் பேசுவது என இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 10ம் தேதி பெங்களூரில் இச் சந்திப்பு நடக்கவுள்ளது.

அதே போல 7 அல்லது 8ம் தேதி தமிழக, பாண்டிச்சேரியைச் சேர்ந்த 40 எம்.பிக்களும் கூட்டாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து காவிரியில் நீரைத் திறந்துவிடக் கோருவர் என்றார் கருணாநிதி.

காவிரி நீரைப் பெற இது முதல்படி என்ற கருணாநிதி, காவிரி விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு ஜனநாயக முற்போக்குக் கூட்டணி மேற்கொள்ளும் இந்த முயற்சிக்கு அதிமுக அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், அதிமுகவும் இக் குழுவில் பங்கேற்க வேண்டும்.

காவிரி ஆணையத்தைக் கூட்டக் கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். அதிமுக அரசு இப்போதாவது விழித்துக் கொண்டுள்ளது மகிழ்ச்சி தருகிறது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+