ரேஷன் கார்டு: மக்களிடம் விண்ணப்பங்களை வாங்க மறுக்கும் சத்துணவுப் பணியாளர்கள்
சென்னை:
புதிய குடும்ப அட்டைகளுக்கான விண்ணப்பங்களைப் பெற சில சத்துணவு அமைப்பாளர்கள் மறுத்து வருவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
புதிய குடும்ப அட்டைகளுக்கான விண்ணப்பங்களை பொதுமக்கள் பூர்த்தி செய்து அருகில் உள்ள சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்களில் கொடுக்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
ஜூன் 1ம் தேதி முதல் விண்ணப்பங்களைக் கொடுக்கலாம் என்றும் முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி ஏராளமான பொதுமக்கள் குடும்ப அட்டைகளுக்கான விண்ணப்பங்களைக் கொடுத்து வருகிறார்கள். ஆனால் சில சத்துணவு மையங்களின் அமைப்பாளர்கள் விண்ணப்பங்களை ஏற்க மறுத்து வருகிறார்கள்.
ஏற்கனவே ஏராளமான பணிகளை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந் நிலையில், இதையும் எப்படிப் பார்ப்பது என்று கேட்கும் அவர்கள் தங்களிடம் மனுக்களுடன் வரும் பொதுமக்களை திருப்பி அனுப்புகிறார்கள்.
இதனால் பல இடங்களில் சத்துணவு அமைப்பாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்து வருகிறது.
சத்துணவு அமைப்பாளர்களின் இந்தப் போக்கினால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
-
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு!











Click it and Unblock the Notifications