சுப. இளவரசன் மீது பொடா வழக்கு?
சென்னை:
தமிழர் விடுதலைப் படை தலைவர் சுப. இளவரசன் மீது பொடாவில் வழக்குப் பதிவு செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் பொடாவில் சிறையில் அடைக்கப்படலாம்.
தமிழக, கர்நாடக வனப் பகுதியில் வைத்து சுப. இளவரசனை அதிரடிப்படை போலீஸார் பிடித்ததாகக் கூறுகின்றனர். ஆனால், அவர் இரண்டு மாதங்களுக்கு முன்பே போலீசாரிடம் சரணடைந்துவிட்டதாகவும், இப்போது தான் அதை கைது போல போலீசார் காட்டியுள்ளதாகவும் கூறப்பட்டுகிறது.
போலீஸ் விசாரணைக்குப் பின்னர் சேலம் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில், வெள்ளிக்கிழமை அவர் திடீரென்று சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சில குண்டு வெடிப்பு வழக்குகளுக்காக அவரை கைது செய்துள்ளதாக நீதிபதியிடம் தெரிவித்த போலீசார், அது குறித்து விசாரிக்க இளவரசனை சென்னையில் வைத்திருக்க வசதியாக, சென்னை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரினர்.
இதையேற்ற நீதிபதி அவரை மத்திய சிறையில் அடைக்கவும், வரும் 9ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.
இதற்கிடையே இளவரசன் மீது போலீசார் பொடாவில் வழக்குப் பதிவு செய்யலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. அதற்கு வசதியாகவே அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
முன்பு நக்கீரன் ஆசிரியர் கோபாலை சாதாரண வழக்கில் கைது செய்துவிட்டு, பின்னர் அவர் மீது போலீசார் பொடா வழக்கு போட்டது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications