பி.இ, எம்.பி.பி.எஸ்: மறு நுழைவு தேர்வு கிடையாது- உயர் நீதிமன்றம்சென்னை:தமிழகத்தில் பொறியியல், மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்து விட்டு மறு நுழைவுத் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.தமிழகத்தில் பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் கேட்கப்பட்ட 22 கேள்விகள் மிகவும் கடினமாக இருந்ததால் மாணவர்களால் அதற்கு பதிலளிக்க முடியவில்லை. இந் நிலையில் இக்கேள்விகளை ரத்து செய்து விட்டு, அவற்றிற்கான மதிப்பெண்களை மற்ற கேள்விகளுக்கு கொடுப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.இதை எதிர்த்து மாணவர்கள், பெற்றோர்கள் சார்பில் 200க்கும் மேற்பட்ட ரிட் மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அதற்குப் பதில் மறு நுழைவுத் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.வழக்கு விசாரணை நடந்தபோது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பிளஸ் டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்களை மட்டும் அடிப்படையாக வைத்து தொழில் கல்வி சேர்க்கையை நடத்த வேண்டும் என்று கோரினார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.கே.மிஸ்ரா, மீண்டும் மறு நுழைவுத் தேர்வு நடத்துவதால் பலன் இருக்காது. எனவே மீண்டும் நுழைவுத் தேர்வு நடத்த நான் உத்தரவிட மாட்டேன்.அதேபோல,பிளஸ் டூ மதிப்பெண்களை மட்டும் அடிப்படையாக வைத்து மாணவர் சேர்க்கையை நடத்துவதும் சரியானதாக இருக்காது. இது சரியான தீர்வாகாது என்றார் நீதிபதி.இந்த வழக்கில் தொடர்ந்து விவாதம் நடைபெறவுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் பொறியியல், மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்து விட்டு மறு நுழைவுத் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
தமிழகத்தில் பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் கேட்கப்பட்ட 22 கேள்விகள் மிகவும் கடினமாக இருந்ததால் மாணவர்களால் அதற்கு பதிலளிக்க முடியவில்லை. இந் நிலையில் இக்கேள்விகளை ரத்து செய்து விட்டு, அவற்றிற்கான மதிப்பெண்களை மற்ற கேள்விகளுக்கு கொடுப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.
இதை எதிர்த்து மாணவர்கள், பெற்றோர்கள் சார்பில் 200க்கும் மேற்பட்ட ரிட் மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அதற்குப் பதில் மறு நுழைவுத் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணை நடந்தபோது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பிளஸ் டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்களை மட்டும் அடிப்படையாக வைத்து தொழில் கல்வி சேர்க்கையை நடத்த வேண்டும் என்று கோரினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.கே.மிஸ்ரா, மீண்டும் மறு நுழைவுத் தேர்வு நடத்துவதால் பலன் இருக்காது. எனவே மீண்டும் நுழைவுத் தேர்வு நடத்த நான் உத்தரவிட மாட்டேன்.
அதேபோல,பிளஸ் டூ மதிப்பெண்களை மட்டும் அடிப்படையாக வைத்து மாணவர் சேர்க்கையை நடத்துவதும் சரியானதாக இருக்காது. இது சரியான தீர்வாகாது என்றார் நீதிபதி.
இந்த வழக்கில் தொடர்ந்து விவாதம் நடைபெறவுள்ளது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications