காவிரி: பிரதமருடன் தமிழக அனைத்து கட்சி எம்.பிக்கள் சந்திப்பு
டெல்லி:
கர்நாடகத்தில் இருந்து காவிரியில் உடனடியாகத் தண்ணீர் திறந்துவிடக் கோரி தமிழக அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழு இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தது.
மக்களவை, மாநிலங்களைவையைச் சேர்ந்த 59 எம்.பிக்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
திமுக தலைமை நிலையச் செயலாளர் துரைமுருகன் தலைமையிலான இந்தக் குழுவில் அதிமுக ராஜ்யசபா எம்.பிக்களும் பங்கேற்றனர். இந்த இரு கட்சியினரும் இணைந்து பிரதமரை சந்திப்பது இதுவே முறையாகும்.
இந்தக் குழுவில் திமுக, காங்கிரஸ், பா.ம.கவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், மக்களவை எம்.பிக்களும், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மக்களவை எம்.பிக்கள், அதிமுக, திமுகவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பிக்களுமாக மொத்தம் 59 பேர் இடம் பெற்றிருந்தனர்.
தமிழகத்தில் காவிரி டெல்டாவில் நிலவும் பயங்கர வறட்சி, கடந்த 3 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருக்கும் குறுவை, சம்பா சாகுபடி, விவசாயிகள் அடைந்து வரும் துயரம் ஆகியவற்றை இந்தக் குழுவினர் பிரதமரிடம் விளக்கினர்.
கர்நாடக அணைகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீர், கர்நாடகத்தில் தடையின்றி நடந்து வரும் விவசாயப் பணிகள், தமிழகத்துக்கு சட்டப்படி கிடைத்திருக்க வேண்டிய நீரின் அளவு ஆகியவை குறித்தும் இக் குழு புள்ளி விவர விளக்கம் தந்தது.
உடனடியாக தண்ணீர் திறந்துவிடாவிட்டால் காவிரிப் பாசன விவசாயிகளின் நிலையும், தமிழகத்தின் உணவு சப்ளைக்கு ஏற்படும் பிரச்சனை குறித்தும் விவரமாய் எடுத்துச் சொன்ன இந்தக் குழு உடனே தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரினர்.
சுமார் 30 நிமிடம் இச் சந்திப்பு நடந்தது.
மணிசங்கர அய்யர் பேட்டி:
இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சரும் மயிலாடுதுறை எம்.பியுமான மணிசங்கர் அய்யர், எங்களைத் தொடர்ந்து கர்நாடக எம்.பிக்கள் குழுவும் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கவுள்ளது.
அதன் பின்னர் பிரதமர் முடிவெடுப்பார். இந்த விஷயத்தில் எங்களுக்கு பிரதமர் மீது முழு நம்பிக்கை உள்ளது. காவிரி நடுவர் மன்றத்தின் தலைவர் என்ற முறையில் அவர் உரிய நடவடிக்கை எடுப்பார்.
நடுவர் மன்றமும் அவ்வப்போது கூடி நிலைமையை விவாதிக்க வேண்டும் என்றார்.
துரைமுருகன்:
தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்தை வலியுறுத்துவேன் என பிரதமர் உறுதிமொழி அளித்ததாக துரைமுருகன் கூறினார்.
அவர் கூறுகையில், காவிரி டெல்டா விவசாயிகளுக்கு உடனடியாக தண்ணீர் தேவைப்படுகிறது. இந்த விஷயத்தில் பிரதமர் மிக அதிகமான கவனம் செலுத்த வேண்டும். தண்ணீர் வந்தால் தான் இந்த முறையாவது குறுவை நெல்லை சாகுபடி செய்ய முடியும் என்றார்.
பிரதமரிடம் மனு:
முன்னதாக இந்தக் குழு பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வழங்கிய மனுவில்,
காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை கர்நாடகம் எப்போதுமே மதித்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டதில்லை. கர்நாடகம் வழக்கம்போல இந்த ஆண்டும் நீர் தர மறுப்பதால், திட்டமிட்டபடி ஜூன் 12ம் தேதி மேட்டூரில் இருந்து தஞ்சைக்கு நீர் திறந்துவிட முடியாத சூழல் நிலவுகிறது.
1991ம் ஆண்டில் நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பைத் தந்தாலும் அதை கர்நாடகம் மதிக்காமல் இருந்து வருவது வேதனைக்குரியது. இதனால் விவசாயப் பணிகளே ஸ்தம்பித்துப் போய்விட்டன. பயிர்களை இழந்து பல லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications