எதிர்க் கட்சிகள் கூச்சல், குழப்பம்: அவைகள் ஒத்திவைப்பு
டெல்லி:
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பதாகக் கூறி அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கூச்சலால் நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் இன்று காலை ஒத்தி வைக்கப்பட்டன.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கும்போது, குற்ற வழக்குகளில் தொடர்புடைய ராஷ்டிரீய ஜனதா தள எம்.பிக்கள் அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பது குறித்து பிரச்சனை எழுப்புவோம் என்று எதிர்க்கட்சிகள் அறிவித்திருந்தன.
இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்தப் பிரச்சனை பலமாக எதிரொலித்தது. அவை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் இது தொடர்பாக குரல் எழுப்பின. பதிலுக்கு ராஷ்ட்டீய ஜனதா தளத்தினரும் குரல் தந்தனர்.
துணைப் பிரதமராக இருந்த அத்வானி மீது பாபர் மசூதி இடிப்பு வழக்கு இல்லையா, தெகல்கா, ஆயுத ஊழலில் சிக்கிய ஜார்ஜ் பெர்னாண்டஸ் பாதுகாப்பு அமைச்சராக நீடிக்கவில்லையா என அவர்கள் பதிலுக்குக் கத்தினர்.
இதனால் அவையில் கூச்சலும் குழப்பமும் நிலவியது.
இதனையடுத்து மக்களவை இரண்டு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications