மத்-தி-ய நிபுணர் குழு விரைவு- தமிழகம், கர்நாடகத்தில் ஆய்வு
டெல்லி:
கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் காவிரிப் படுகையில் உள்ள அணைகளின் நீர் மட்டம், விவசாயப் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு அறிக்கை தர 3 நிபுணர்கள் அடங்கிய குழுவை பிரதமர் மன்மோகன் சிங் அனுப்பி வைத்துள்ளார்.
மத்திய நீர்வளக் கமிஷனின் தலைவர் வஷ்ட்டா தலைமையிலான இந்தக் குழு இன்று தமிழகம் புறப்பட்டது. வரும் 11ம் தேதி டெல்லி திரும்பும் இந்தக் குழு மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடம் அறிக்கை அளிக்கும்.
பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த தமிழக அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழு காவி-ரியில் உடனடியாக தண்ணீர் திறந்து விடுமாறு கர்-நாடகத்திற்கு உத்தரவிட கோ-ரிக்கை விடுத்தனர். ஆனால், கர்நாடகம் தனது அணைகளில் போதுமான நீர் இல்லை என்று கூறி வருகிறது.
அத்தோடு தமிழகத்துக்குத் தண்ணீர் விட முடியாது என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
இதையடுத்து நீர் மட்டம் குறித்து நேரில் ஆய்வு -நடத்தவும், விவசாயப் பணிகள் எந்த அளவில் உள்ளன என்பதை அறியவும், வறட்சி பாதிப்பின் நிலையை ஆராயவும் 3 நிபுணர்கள் அடங்கிய குழுவை இரு மாநிலங்களுக்கும் உடனடியாக அனுப்ப பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
நீர் வள ஆணையத் தலைவர் வஷ்ட்டா தலைமையில், மத்திய நீர் வளத்துறை மற்றும் வேளாண் அமைச்சகத்தைச் சேர்ந்த 2 நிபுணர்கள் அடங்கிய இந்தக் குழு கர்-நாடகம் மற்றும் தமிழகத்தில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறது.
இந்தக் குழுவினர் கர்-நாடகத்தில் உள்ள 4 -முக்கிய அணைகள் மற்றும் தமிழகத்தின் மேட்டூர் அணை ஆகியவற்றை -ந-ரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறது. தமிழக காவி-ரிப் பாசனப் பகுதிக்கும் செல்லும் இந்தக் குழு அங்கு பெய்த மழையின் அளவு, குறுவை சாகுபடிக்குத் தேவையான நீர் அளவு ஆகியவற்றை மதிப்பீடு செய்யவுள்ளது.
ஆய்வை முடித்து இந்தக் குழு அளிக்கும் அறிக்கையை நீர்வளத்துறை பிரதமரிடம் சமர்பிக்கும். பின்னர் வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையையும் பெற்று அடுத்த கட்ட -நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளும்.












Click it and Unblock the Notifications