கலாம் உ-ற-வி-ன-ரிடம் திருடியவர் மன்னிப்பு கேட்டார்சென்னை: சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உறவினரிடம் ரூ. 80,000 மதிப்புள்ள பொருட்களைத் திருடிய நபர் அந்தப் பொருட்களை திருப்பிக் கொடுத்து விட்டு மன்னிப்பும் கேட்டுள்ளார்.கடந்த 3ம் தேதி பெங்களூர் செல்வதற்காக அப்துல் கலாமின் உறவினர் ஷேக் தாவூத் என்பவர் சென்டிரல் ரயில் நிலையம் வந்தார். தனது ரயில் பெட்டியில் ரூ. 80,000 மதிப்புள்ள கம்ப்யூட்டர் சாதனங்கள், புத்தகங்கள் அடங்கிய பெட்டியை வைத்து விட்டு காபி சாப்பிடுவதற்காக வெளியே சென்றார்.போகும்போது தனக்கு அருகில் இருந்த பயணியிடம் பெட்டியை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு கூறிச் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது பெட்டியையும், அந்த பயணியையும் காணவில்லை.இதுகுறித்து சென்டிரல் ரயில் நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டு பெங்களூர் திரும்பினார் ஷேக் தாவூத். இந் -நிலையில் சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. ரயில் நிலைய ஊழியர்கள் பெட்டிகளில் வழக்கமான சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது ஒரு பெட்டியில் பெ-ரிய பை ஒன்று கிடந்தது. அதை மீட்டு ரயில்வே போலீஸா-ரிடம் கொடுத்தனர்.போலீஸார் அதை திறந்து பார்த்தபோது, ஷேக் தாவூதிடமிருந்து திருடு போன பொருட்கள் அப்படியே அதில் இருந்தன. அதில் ஒரு கடிதம் இருந்தது. அந்தக் கடிதத்தை யூசுப் என்பவர் எழுதியிருந்தார்.அதில், -நான் -மும்பை தாராவி பகுதியில் வசிக்கிறேன். சென்னை பாண்டி பஜா-ரில் சிறிது காலம் வேலை பார்த்தேன். மஞ்சள் காமாலை -நாய் வந்ததால் -மும்பை திரும்ப -முடிவு செய்து ரயிலில் அமர்ந்திருந்தேன். அப்போதுதான் இந்த பையைத் திருடினேன். இதை உ-ரியவ-ரிடம் ஒப்படைத்து விடுங்கள், என்னையும் மன்னித்து விடுங்கள் என்று கூறப்பட்டிருந்தது.சூட்கேஸைத் திருடி விட்டுத் திருப்பித் தந்து, மன்னிப்பும் கேட்டுள்ள யூசுப் தனக்கு 70 வயது என்-று கு-றிப்-பிட்-டுள்-ளார். யூசுப்பை பிடிக்கும் பணியை போலீஸார் தற்போது -முடுக்கி விட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உறவினரிடம் ரூ. 80,000 மதிப்புள்ள பொருட்களைத் திருடிய நபர் அந்தப் பொருட்களை திருப்பிக் கொடுத்து விட்டு மன்னிப்பும் கேட்டுள்ளார்.

கடந்த 3ம் தேதி பெங்களூர் செல்வதற்காக அப்துல் கலாமின் உறவினர் ஷேக் தாவூத் என்பவர் சென்டிரல் ரயில் நிலையம் வந்தார். தனது ரயில் பெட்டியில் ரூ. 80,000 மதிப்புள்ள கம்ப்யூட்டர் சாதனங்கள், புத்தகங்கள் அடங்கிய பெட்டியை வைத்து விட்டு காபி சாப்பிடுவதற்காக வெளியே சென்றார்.

போகும்போது தனக்கு அருகில் இருந்த பயணியிடம் பெட்டியை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு கூறிச் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது பெட்டியையும், அந்த பயணியையும் காணவில்லை.

இதுகுறித்து சென்டிரல் ரயில் நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டு பெங்களூர் திரும்பினார் ஷேக் தாவூத். இந் -நிலையில் சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது.

ரயில் நிலைய ஊழியர்கள் பெட்டிகளில் வழக்கமான சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது ஒரு பெட்டியில் பெ-ரிய பை ஒன்று கிடந்தது. அதை மீட்டு ரயில்வே போலீஸா-ரிடம் கொடுத்தனர்.

போலீஸார் அதை திறந்து பார்த்தபோது, ஷேக் தாவூதிடமிருந்து திருடு போன பொருட்கள் அப்படியே அதில் இருந்தன. அதில் ஒரு கடிதம் இருந்தது. அந்தக் கடிதத்தை யூசுப் என்பவர் எழுதியிருந்தார்.

அதில், -நான் -மும்பை தாராவி பகுதியில் வசிக்கிறேன். சென்னை பாண்டி பஜா-ரில் சிறிது காலம் வேலை பார்த்தேன். மஞ்சள் காமாலை -நாய் வந்ததால் -மும்பை திரும்ப -முடிவு செய்து ரயிலில் அமர்ந்திருந்தேன். அப்போதுதான் இந்த பையைத் திருடினேன். இதை உ-ரியவ-ரிடம் ஒப்படைத்து விடுங்கள், என்னையும் மன்னித்து விடுங்கள் என்று கூறப்பட்டிருந்தது.

சூட்கேஸைத் திருடி விட்டுத் திருப்பித் தந்து, மன்னிப்பும் கேட்டுள்ள யூசுப் தனக்கு 70 வயது என்-று கு-றிப்-பிட்-டுள்-ளார். யூசுப்பை பிடிக்கும் பணியை போலீஸார் தற்போது -முடுக்கி விட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+