நாளை இந்தியா வருகிறது ஒலிம்பிக் தீபம்டெல்லி:கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான தீபம் நாளை (வியாழக்கிழமை) டெல்லி வருகிறது.வரும் ஆகஸ்ட் 13ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. இதையொட்டி ஒலிம்பிக் தீபம் உலகை வலம் வந்து கொண்டுள்ளது.கடந்த ஒலிம்பிக் போட்டி நடந்த ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து ஒலிம்பிக் தீபத்தின் பயணம் தொடங்கியது.6 வாரத்தில் 5 கண்டங்களில் உள்ள 27 நாடுகளின் 34 நகர்களை இந்த தீபம் கடக்கும். மொத்தம் 78,000 கி.மீ. தூரத்தை இந்தத் தீபம் சிறப்பு விமானங்கள், கப்பல்கள், வாகனங்களில் கடந்து கொண்டிருக்கிறது.நேற்று சீனாவை (அடுத்த ஒலிம்பிக்ஸ் நடக்கும் நாடு) அடைந்த இந்தத் தீபம் நாளை மாலை இந்தியாவை அடையும். இந்த தீபத்தை வரவேற்க மிகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.விமான நிலையத்தில் இருந்து குதுப்மினார், செங்கோட்டை, ஹுமாயூனின் நினைவிடம், இந்தியா கேட் வழியாக டெல்லி தேசிய விளையாட்டு அரங்குக்கு இந்தத் தீபம் கொண்டு வரப்படும்.டெல்லியில் 32 கி.மீ. தூரம் ஓட்டமாக இந்த தீபம் எடுத்துச் செல்லப்படும்.இதனை ஏந்திக் கொண்டு ஓட்டத்தில் பங்கேற்கப் போவது கபில்தேவ், மில்கா சிங், ராகுல் திராவிட், பதான், அனில் கும்ப்ளே, ஷெவாக், மல்லேஸ்வரி, ஜஸ்பால் ராணா, அஞ்சலி பகத், மகேஷ் பூபதி ஆகிய விளையாட்டு வீரர்களும் அமீர் கான், ஐஸ்வர்யா ராய், விவேக் ஓபராய், சிம்ரன் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்களும்.தீபத்தை வரவேற்க டெல்லியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகளும் திரளவுள்ளனர்.கடைசியாக கடந்த 1964ம் ஆண்டில் தான் ஒலிம்பிக் ஜோதி இந்தியா வந்தது. சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின் ஒலிம்பிக் தீபம் இப்போது தான் இந்தியாவைத் தொடுகிறது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான தீபம் நாளை (வியாழக்கிழமை) டெல்லி வருகிறது.

வரும் ஆகஸ்ட் 13ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. இதையொட்டி ஒலிம்பிக் தீபம் உலகை வலம் வந்து கொண்டுள்ளது.

கடந்த ஒலிம்பிக் போட்டி நடந்த ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து ஒலிம்பிக் தீபத்தின் பயணம் தொடங்கியது.

6 வாரத்தில் 5 கண்டங்களில் உள்ள 27 நாடுகளின் 34 நகர்களை இந்த தீபம் கடக்கும். மொத்தம் 78,000 கி.மீ. தூரத்தை இந்தத் தீபம் சிறப்பு விமானங்கள், கப்பல்கள், வாகனங்களில் கடந்து கொண்டிருக்கிறது.

நேற்று சீனாவை (அடுத்த ஒலிம்பிக்ஸ் நடக்கும் நாடு) அடைந்த இந்தத் தீபம் நாளை மாலை இந்தியாவை அடையும். இந்த தீபத்தை வரவேற்க மிகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விமான நிலையத்தில் இருந்து குதுப்மினார், செங்கோட்டை, ஹுமாயூனின் நினைவிடம், இந்தியா கேட் வழியாக டெல்லி தேசிய விளையாட்டு அரங்குக்கு இந்தத் தீபம் கொண்டு வரப்படும்.

டெல்லியில் 32 கி.மீ. தூரம் ஓட்டமாக இந்த தீபம் எடுத்துச் செல்லப்படும்.

இதனை ஏந்திக் கொண்டு ஓட்டத்தில் பங்கேற்கப் போவது கபில்தேவ், மில்கா சிங், ராகுல் திராவிட், பதான், அனில் கும்ப்ளே, ஷெவாக், மல்லேஸ்வரி, ஜஸ்பால் ராணா, அஞ்சலி பகத், மகேஷ் பூபதி ஆகிய விளையாட்டு வீரர்களும் அமீர் கான், ஐஸ்வர்யா ராய், விவேக் ஓபராய், சிம்ரன் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்களும்.

தீபத்தை வரவேற்க டெல்லியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகளும் திரளவுள்ளனர்.

கடைசியாக கடந்த 1964ம் ஆண்டில் தான் ஒலிம்பிக் ஜோதி இந்தியா வந்தது. சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின் ஒலிம்பிக் தீபம் இப்போது தான் இந்தியாவைத் தொடுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+