மீண்டும் மதமாற்றத் தடை சட்டம் கோரி 14ம் தேதி இந்து முன்னணி போராட்டம்ஊட்டி:மீண்டும் மத மாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வரக் கோரி வரும் 14ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக இந்து முன்னணியின் தலைவர் ராம.கோபாலன் கூறியுள்ளார்.ஊட்டியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:தமிழக முதல்வர் எச் முத்திரை ரத்து செய்ததையும், இலவச பஸ் பாஸ் தந்ததையும், அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்தததையும் வரவேற்கிறேன். இந்த சலுகைகள் எல்லாம் சட்டமன்றத் தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக ஜெயலலிதா செய்தார் என்று குற்றம் சாட்டப்படலாம்.ஆனாலும் தைரியமாய் இதைச் செய்த ஜெயலலிதாவை பாராட்டுகிறேன். ஆனால், கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தை ரத்து செய்ததைத் தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.முதல்வர் திரும்ப வழங்கிய சலுகைகளால் மாநிலத்துக்கு பொருளாதார இழப்பு மட்டுமே ஏற்படும். ஆனால், மதமாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் நாட்டுக்கே பெரும் ஆபத்தாக முடியப் போகிறது.மதம் மாற்றுகின்ற மதத் தலைவர்கள் புதிய அதிகார மையங்களாக உருவெடுத்து தீராத தலைவலியைத் தரப் போகிறார்கள். இதனால் நாட்டின் சுதத்திரத்துக்கும், ஜனநாயகத்துக்கும் பெரும் பிரச்சனை ஏற்படும்.அரசு நம்மை பாதுகாக்கும் என்ற நிலை தலைகீழாக மாறும்போது, தங்களையும், தங்கள் மதத்தையும், கோவில்களையும் நாமே தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற கவலையால் மக்கள் தாங்களே தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.அப்படிப்பட்ட நிலைக்கு மக்கள் தள்ளப்படும்போது மத மோதல்களை சந்திக்க வேண்டி வரும். மதமாற்றத் தடை சட்டம் வாபஸ் பெறப்பட்டது இந்துக்களுக்கு அவமானத்தையும் தலை குனிவையும் ஏற்படுத்தியுள்ளது.எந்த சட்டமாக இருந்தாலும் அதை நிறைவேற்றும் பொறுப்பு மக்களிடம் தான் உள்ளது. எனவே, மக்களே ஒவ்வொரு கிராமத்திலும் மதமாற்றத் தடுப்புக் குழுக்களை உருவாக்க வேண்டும்.கூட்டு வழிபாட்டின் மூலம் தீண்டாமையையும் சாதி மோதல்களையும் அறவே கைவிட வேண்டும். மதமாற்றத் தடுப்பு விஷயத்தில் அரசையோ, கட்சிகளையும் இனியும் நம்பி ஏமாறாமல் மக்களே பொறுப்பேற்க வேண்டும்.தமிழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு அந்தச் சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும். அதை வலியுறுத்தி வரும் 14ம் தேதி ஊட்டியில் அடையாள போராட்டம் நடக்கும்.இதில் என்னுடன் பா.ஜ.க. பொதுச் செயலாளர் மோகன் ராஜுலுவும் பங்கேற்பார்.தமிழக முதல்வர் என்னிடம் ஆலோசனை கேட்டு நடப்பதாக புரளி கிளப்புகிறார்கள். என்னிடம் கேட்டிருந்தால் மதமாற்றத் தடைச் சட்டத்தை வாபஸ் பெற்றிருக்க மாட்டார்.மதமாற்றத் தடைச் சட்டத்தை வாபஸ் பெறக் கோரி நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க முதல்வரிடம் நேரம் கேட்டுள்ளேன். இந்துக்களுக்கு ஒரு துரதிஷ்டம் என்னவென்றால், பெரும்பான்மை சமுதாயத்தினரின் பிரதிநிதிகள் முதல்வரை சந்திக்க முடிவதில்லை.ஆனால், சிறுபான்மை மக்களின் பிரதிநிதியென்றால் உடனே நேரம் கொடுக்கிறார்கள். இது வருத்தத்தைத் தருகிறது. மதமாற்றத்துக்கு வறுமை காரணம் என்கிறார்கள். அது உண்மையல்ல. மத உணர்வு இல்லாததாது தான் காரணம் என்றார் ராம.கோபாலன்.

Subscribe to Oneindia Tamil

ஊட்டி:

மீண்டும் மத மாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வரக் கோரி வரும் 14ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக இந்து முன்னணியின் தலைவர் ராம.கோபாலன் கூறியுள்ளார்.

ஊட்டியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழக முதல்வர் எச் முத்திரை ரத்து செய்ததையும், இலவச பஸ் பாஸ் தந்ததையும், அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்தததையும் வரவேற்கிறேன். இந்த சலுகைகள் எல்லாம் சட்டமன்றத் தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக ஜெயலலிதா செய்தார் என்று குற்றம் சாட்டப்படலாம்.

ஆனாலும் தைரியமாய் இதைச் செய்த ஜெயலலிதாவை பாராட்டுகிறேன். ஆனால், கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தை ரத்து செய்ததைத் தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

முதல்வர் திரும்ப வழங்கிய சலுகைகளால் மாநிலத்துக்கு பொருளாதார இழப்பு மட்டுமே ஏற்படும். ஆனால், மதமாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் நாட்டுக்கே பெரும் ஆபத்தாக முடியப் போகிறது.

மதம் மாற்றுகின்ற மதத் தலைவர்கள் புதிய அதிகார மையங்களாக உருவெடுத்து தீராத தலைவலியைத் தரப் போகிறார்கள். இதனால் நாட்டின் சுதத்திரத்துக்கும், ஜனநாயகத்துக்கும் பெரும் பிரச்சனை ஏற்படும்.

அரசு நம்மை பாதுகாக்கும் என்ற நிலை தலைகீழாக மாறும்போது, தங்களையும், தங்கள் மதத்தையும், கோவில்களையும் நாமே தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற கவலையால் மக்கள் தாங்களே தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.

அப்படிப்பட்ட நிலைக்கு மக்கள் தள்ளப்படும்போது மத மோதல்களை சந்திக்க வேண்டி வரும். மதமாற்றத் தடை சட்டம் வாபஸ் பெறப்பட்டது இந்துக்களுக்கு அவமானத்தையும் தலை குனிவையும் ஏற்படுத்தியுள்ளது.

எந்த சட்டமாக இருந்தாலும் அதை நிறைவேற்றும் பொறுப்பு மக்களிடம் தான் உள்ளது. எனவே, மக்களே ஒவ்வொரு கிராமத்திலும் மதமாற்றத் தடுப்புக் குழுக்களை உருவாக்க வேண்டும்.

கூட்டு வழிபாட்டின் மூலம் தீண்டாமையையும் சாதி மோதல்களையும் அறவே கைவிட வேண்டும். மதமாற்றத் தடுப்பு விஷயத்தில் அரசையோ, கட்சிகளையும் இனியும் நம்பி ஏமாறாமல் மக்களே பொறுப்பேற்க வேண்டும்.

தமிழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு அந்தச் சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும். அதை வலியுறுத்தி வரும் 14ம் தேதி ஊட்டியில் அடையாள போராட்டம் நடக்கும்.

இதில் என்னுடன் பா.ஜ.க. பொதுச் செயலாளர் மோகன் ராஜுலுவும் பங்கேற்பார்.

தமிழக முதல்வர் என்னிடம் ஆலோசனை கேட்டு நடப்பதாக புரளி கிளப்புகிறார்கள். என்னிடம் கேட்டிருந்தால் மதமாற்றத் தடைச் சட்டத்தை வாபஸ் பெற்றிருக்க மாட்டார்.

மதமாற்றத் தடைச் சட்டத்தை வாபஸ் பெறக் கோரி நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க முதல்வரிடம் நேரம் கேட்டுள்ளேன். இந்துக்களுக்கு ஒரு துரதிஷ்டம் என்னவென்றால், பெரும்பான்மை சமுதாயத்தினரின் பிரதிநிதிகள் முதல்வரை சந்திக்க முடிவதில்லை.

ஆனால், சிறுபான்மை மக்களின் பிரதிநிதியென்றால் உடனே நேரம் கொடுக்கிறார்கள். இது வருத்தத்தைத் தருகிறது. மதமாற்றத்துக்கு வறுமை காரணம் என்கிறார்கள். அது உண்மையல்ல. மத உணர்வு இல்லாததாது தான் காரணம் என்றார் ராம.கோபாலன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+