திருப்பதி கோவில் அறங்காவலர் குழுவில் சீனிவாசன்: கருணாநிதி பரிந்துரையால் இடம் கிடைத்ததுதிருமலை:திருமலை திருப்பசி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுவை ஆந்திர அரசு மாற்றி அமைத்துள்ளது. இந்தக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன அதிபர் சீனிவாசனும் சேர்க்கப்பட்டுள்ளார்.இவரது பெயரை ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியிடம் திமுக தலைவர் கருணாநிதி பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது.ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து அறங்காவலர் குழுவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற இந்த புண்ணிய தலத்தின் அறங்காவலர் குழுவில் இடம் பிடிக்க முக்கிய புள்ளிகள் இடையே கடும் போட்டி நிலவியது.இந் நிலையில் இந்தக் குழுவில் சீனிவாசனையும் சேர்க்குமாறு, தனது பேத்தியின் (ஸ்டாலின் மகள்) திருமணத்துக்கு வந்திருந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியிடும் கருணாநிதி பரிந்துரை செய்ததாகக் கூறப்படுகிறது.இதையேற்று அவரும் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
திருமலை:
திருமலை திருப்பசி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுவை ஆந்திர அரசு மாற்றி அமைத்துள்ளது. இந்தக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன அதிபர் சீனிவாசனும் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவரது பெயரை ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியிடம் திமுக தலைவர் கருணாநிதி பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது.
ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து அறங்காவலர் குழுவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற இந்த புண்ணிய தலத்தின் அறங்காவலர் குழுவில் இடம் பிடிக்க முக்கிய புள்ளிகள் இடையே கடும் போட்டி நிலவியது.
இந் நிலையில் இந்தக் குழுவில் சீனிவாசனையும் சேர்க்குமாறு, தனது பேத்தியின் (ஸ்டாலின் மகள்) திருமணத்துக்கு வந்திருந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியிடும் கருணாநிதி பரிந்துரை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையேற்று அவரும் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications