தனுஷ்கோடி ஆதித்தன் வெற்றியை எதிர்த்து வழக்குசென்னை: திருநெல்வேலி காங்கிரஸ் எம்.பி. தனுஷ்கோடி ஆதித்தன் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக்கோரி, அத்தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்த சுயேச்சை வேட்பாளர் ராஜகோபாலன் சென்னை உயர் நீதிமன்றத்தில்மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தனுஷ்கோடி ஆதித்தன் ஏப்ரல் 21-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அவரது சொத்து விவரம், அவர் மீது கிரிமினல்வழக்குகள் உள்ளனவா என்ற விவரங்களைத் தெரிவிக்கும் 2 மனுக்களை தாக்கல் செய்யவில்லை. தேர்தல் அதிகாரி அன்றைய தினமே இது குறித்து தனுஷ்கோடி ஆதித்தனுக்குத் தகவல் அனுப்பினார். இதையடுத்து வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி முடிந்த பிறகு, இரு மனுக்களையும் தனுஷ்கோடி ஆதித்தன் தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலுக்குப் பிறகு, மீண்டும் அதில் வேறு எந்த மனுவையும் செருகக் கூடாது. தேர்தல் அதிகாரி விதிமுறைப்படி செயல்பட்டிருந்தால், தனுஷ்கோடி ஆதித்தனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருக்கும். எனவே அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரி ஏற்றது சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும். தனுஷ்கோடி ஆதித்தனின்தேர்தல் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
சென்னை:
திருநெல்வேலி காங்கிரஸ் எம்.பி. தனுஷ்கோடி ஆதித்தன் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக்கோரி, அத்தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்த சுயேச்சை வேட்பாளர் ராஜகோபாலன் சென்னை உயர் நீதிமன்றத்தில்மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தனுஷ்கோடி ஆதித்தன் ஏப்ரல் 21-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அவரது சொத்து விவரம், அவர் மீது கிரிமினல்வழக்குகள் உள்ளனவா என்ற விவரங்களைத் தெரிவிக்கும் 2 மனுக்களை தாக்கல் செய்யவில்லை.
தேர்தல் அதிகாரி அன்றைய தினமே இது குறித்து தனுஷ்கோடி ஆதித்தனுக்குத் தகவல் அனுப்பினார். இதையடுத்து வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி முடிந்த பிறகு, இரு மனுக்களையும் தனுஷ்கோடி ஆதித்தன் தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கலுக்குப் பிறகு, மீண்டும் அதில் வேறு எந்த மனுவையும் செருகக் கூடாது.
தேர்தல் அதிகாரி விதிமுறைப்படி செயல்பட்டிருந்தால், தனுஷ்கோடி ஆதித்தனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருக்கும்.
எனவே அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரி ஏற்றது சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும். தனுஷ்கோடி ஆதித்தனின்தேர்தல் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications