மதுரை பல்கலைக்கழகத்துக்கு தயாநிதி ரூ. 52 லட்சம் ஒதுக்கீடுசென்னை: மதுரை காமராஜர் பல்கலைகழக ஆய்வுத் திட்டத்திற்காக ரூ. 51.99 லட்சம் நிதியை மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் ஒதுக்கியுள்ளார்.மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் எதிர்காலக் கல்வியியல் துறையின் சார்பில் ஊரக வளர்ச்சி கண்காணிப்பு என்ற திட்டம் தயாநிதி மாறனின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அத்திட்டத்திற்கு நிதியுதவி செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.இந்தத் திட்டம் புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 10 தாலுகாக்களில் அமல்படுத்தப்படும். 2ஆண்டுகளுக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திட்டத் தலைவராகஇருப்பார்.இத் திட்டத்தின்படி, 10 தாலுகாக்களின் நில விவரங்கள், நீர் அளவு, ரயில் வசதி, சாலை வசதி, காலநிலை, பொதுசுகாதாரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டு கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். இந்தவிவரங்களை மாவட்ட நிர்வாகம் உடனடியாகப் பெறும் வகையில் வசதிகள் செய்யப்படும்.இதன் மூலம், 10 தாலுகாக்களிலும் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதும், அந்தப் பகுதிகளின் வளர்ச்சியைக்கண்காணிப்பதும் அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் எளிதாகும்.இந்தத் திட்டத்திற்கு தனது துறையின் மூலம் ரூ. 51.99 லட்சம் நிதியை ஒதுக்கி தயாநிதி மாறன் உத்தரவிட்டுள்ளார்.தபால் நிலையங்கள் கம்ப்யூட்டர்மயம்இந் நிலையில் இன்று சென்னை தியாகராய நகரில் நவீன அஞ்சலகத்தைத் திறந்து வைத்த தயாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில்,தபால் நிலையங்கள்தான் பொதுமக்களின் எளிய துணைவனாக இன்று வரை விளங்குகிறது. எனவே அரசு சார்ந்த சேவைகள் அனைத்தும் தபால்நிலையங்கள் மூலம் கிடைக்க வகை செய்யப்படும். இதற்கு தபால் நிலையங்களை கம்ப்யூட்டர்மயமாக்க வேண்டியது அவசியம். அதற்கான நடவடிக்கைகளைஅரசு விரைந்து மேற்கொள்ளும்.தனியார் கூரியர் சேவையினால் ஏற்பட்டுள்ள போட்டியை ஈடுகட்ட தபால் துறை பல்வேறு புதிய உத்திகளை மேற்கொண்டு வருகிறது. பதிவுத்தபால்களை வீடுகளுக்கே சென்று பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
சென்னை:
மதுரை காமராஜர் பல்கலைகழக ஆய்வுத் திட்டத்திற்காக ரூ. 51.99 லட்சம் நிதியை மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் ஒதுக்கியுள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் எதிர்காலக் கல்வியியல் துறையின் சார்பில்
ஊரக வளர்ச்சி கண்காணிப்பு என்ற திட்டம் தயாநிதி மாறனின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அத்திட்டத்திற்கு நிதியுதவி செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தத் திட்டம் புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 10 தாலுகாக்களில் அமல்படுத்தப்படும். 2ஆண்டுகளுக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திட்டத் தலைவராகஇருப்பார்.
இத் திட்டத்தின்படி, 10 தாலுகாக்களின் நில விவரங்கள், நீர் அளவு, ரயில் வசதி, சாலை வசதி, காலநிலை, பொதுசுகாதாரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டு கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். இந்தவிவரங்களை மாவட்ட நிர்வாகம் உடனடியாகப் பெறும் வகையில் வசதிகள் செய்யப்படும்.
இதன் மூலம், 10 தாலுகாக்களிலும் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதும், அந்தப் பகுதிகளின் வளர்ச்சியைக்கண்காணிப்பதும் அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் எளிதாகும்.
இந்தத் திட்டத்திற்கு தனது துறையின் மூலம் ரூ. 51.99 லட்சம் நிதியை ஒதுக்கி தயாநிதி மாறன் உத்தரவிட்டுள்ளார்.
தபால் நிலையங்கள் கம்ப்யூட்டர்மயம்
இந் நிலையில் இன்று சென்னை தியாகராய நகரில் நவீன அஞ்சலகத்தைத் திறந்து வைத்த தயாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தபால் நிலையங்கள்தான் பொதுமக்களின் எளிய துணைவனாக இன்று வரை விளங்குகிறது. எனவே அரசு சார்ந்த சேவைகள் அனைத்தும் தபால்நிலையங்கள் மூலம் கிடைக்க வகை செய்யப்படும். இதற்கு தபால் நிலையங்களை கம்ப்யூட்டர்மயமாக்க வேண்டியது அவசியம். அதற்கான நடவடிக்கைகளைஅரசு விரைந்து மேற்கொள்ளும்.
தனியார் கூரியர் சேவையினால் ஏற்பட்டுள்ள போட்டியை ஈடுகட்ட தபால் துறை பல்வேறு புதிய உத்திகளை மேற்கொண்டு வருகிறது. பதிவுத்தபால்களை வீடுகளுக்கே சென்று பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications