இந்தியா வந்தது ஒலிம்பிக் தீபம்டெல்லி:ஒலிம்பிக் தீபம் இன்று டெல்லி வந்தடைந்தது.கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் ஆகஸ்ட் 13ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன.இதையொட்டி ஒலிம்பிக் தீபம் உலகை வலம் வந்து கொண்டுள்ளது.ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து சிறப்பு விமானத்தில் கிளம்பிய இந்த ஒலிம்பிக் தீபம், 6 வாரங்களில் 5கண்டங்களில் உள்ள 27 நாடுகளின் 34 நகர்களைக் கடக்கவுள்ளது.மொத்தம் 78,000 கி.மீ. தூரத்தை இந்தத் தீபம் சிறப்பு விமானங்கள், கப்பல்கள், வாகனங்களில் கடந்துகொண்டிருக்கிறது.சீனாவில் இருந்து போயிங் சிறப்பு விமானத்தில் புறப்பட்ட இந்த தீபம் இன்று காலை 10 மணிக்கு டெல்லி சர்வதேசவிமான நிலையம் வந்தடைந்தது.தீபத்தை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் சுரேஷ் கல்மாடி பெற்றுக் கொண்டார். அப்போது இந்தியாவுக்கானகிரேக்க நாட்டுத் தூதர் எப்டாதியோஸ் லோஸோசும் உடனிருந்தார்.விமான நிலையத்தில் இருந்து குதுப்மினார், செங்கோட்டை, ஹுமாயூனின் நினைவிடம், இந்தியா கேட் வழியாகடெல்லி தேசிய விளையாட்டு அரங்குக்கு சுமார் 32 கி.மீ. தூரம் இந்தத் தீபம் எடுத்துச் செல்லப்படும்.இதனை ஏந்திக் கொண்டு கபில்தேவ், மில்கா சிங், ராகுல் திராவிட், பதான், அனில் கும்ப்ளே, ஷெவாக்,மல்லேஸ்வரி, ஜஸ்பால் ராணா, அஞ்சலி பகத், மகேஷ் பூபதி ஆகிய விளையாட்டு வீரர்களும் அமீர் கான்,ஐஸ்வர்யா ராய், விவேக் ஓபராய், சிம்ரன் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்களும் ஓட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.தீபத்தை வரவேற்க டெல்லியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகளும் திரண்டுள்ளனர்.கடைசியாக கடந்த 1964ம் ஆண்டில் தான் ஒலிம்பிக் ஜோதி இந்தியா வந்தது. சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின்ஒலிம்பிக் தீபம் இப்போது தான் இந்தியாவைத் தொடுகிறது.அடுத்த ஒலிம்பிக்ஸ் போட்டி சீனாவில் நடக்கவுள்ளது. 2016ம் ஆண்டு ஒலிம்பிக்ஸை நடத்த இந்தியாவும்விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி:
ஒலிம்பிக் தீபம் இன்று டெல்லி வந்தடைந்தது.
கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் ஆகஸ்ட் 13ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதையொட்டி ஒலிம்பிக் தீபம் உலகை வலம் வந்து கொண்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து சிறப்பு விமானத்தில் கிளம்பிய இந்த ஒலிம்பிக் தீபம், 6 வாரங்களில் 5கண்டங்களில் உள்ள 27 நாடுகளின் 34 நகர்களைக் கடக்கவுள்ளது.
மொத்தம் 78,000 கி.மீ. தூரத்தை இந்தத் தீபம் சிறப்பு விமானங்கள், கப்பல்கள், வாகனங்களில் கடந்துகொண்டிருக்கிறது.
சீனாவில் இருந்து போயிங் சிறப்பு விமானத்தில் புறப்பட்ட இந்த தீபம் இன்று காலை 10 மணிக்கு டெல்லி சர்வதேசவிமான நிலையம் வந்தடைந்தது.
தீபத்தை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் சுரேஷ் கல்மாடி பெற்றுக் கொண்டார். அப்போது இந்தியாவுக்கானகிரேக்க நாட்டுத் தூதர் எப்டாதியோஸ் லோஸோசும் உடனிருந்தார்.
விமான நிலையத்தில் இருந்து குதுப்மினார், செங்கோட்டை, ஹுமாயூனின் நினைவிடம், இந்தியா கேட் வழியாகடெல்லி தேசிய விளையாட்டு அரங்குக்கு சுமார் 32 கி.மீ. தூரம் இந்தத் தீபம் எடுத்துச் செல்லப்படும்.
இதனை ஏந்திக் கொண்டு கபில்தேவ், மில்கா சிங், ராகுல் திராவிட், பதான், அனில் கும்ப்ளே, ஷெவாக்,மல்லேஸ்வரி, ஜஸ்பால் ராணா, அஞ்சலி பகத், மகேஷ் பூபதி ஆகிய விளையாட்டு வீரர்களும் அமீர் கான்,ஐஸ்வர்யா ராய், விவேக் ஓபராய், சிம்ரன் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்களும் ஓட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
தீபத்தை வரவேற்க டெல்லியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகளும் திரண்டுள்ளனர்.
கடைசியாக கடந்த 1964ம் ஆண்டில் தான் ஒலிம்பிக் ஜோதி இந்தியா வந்தது. சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின்ஒலிம்பிக் தீபம் இப்போது தான் இந்தியாவைத் தொடுகிறது.
அடுத்த ஒலிம்பிக்ஸ் போட்டி சீனாவில் நடக்கவுள்ளது. 2016ம் ஆண்டு ஒலிம்பிக்ஸை நடத்த இந்தியாவும்விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications