தண்ணீர் தந்து கொண்டிருக்கிறோம்: கர்நாடகம்டெல்லி:பிரதமர் மன்மோகன் சிங்கை கர்நாடக அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழு இன்று சந்தித்தது. அப்போது, காவிரியில்தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்று தமிழகம் குற்றம் சாட்டுவது தவறானது என அவர்கள் சிங்கிடம் கூறினர்.மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஆஸ்கர் பெர்னாண்டஸ் தலைமையில் 26 எம்.பிக்கள்அடங்கிய குழு இன்று பிரதமரை சந்தித்தது.இக் குழுவில் முன்னாள் காங்கிரஸ் முதல்வரும், இப்போது பா.ஜ.கவில் இருப்பவரும், தமிழர்களுக்கு எதிராகநடந்த காவிரிக் கலவரத்தில் நல்ல பெயர் எடுத்தவருமான பங்காரப்பா, மத்திய அமைச்சர்கள் முனியப்பா,ரகுமான் கான், ராஜசேகர மூர்த்தி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய ஆஸ்கர் பெர்னாண்டஸ்,வறட்சி என்றாலும் அதை இரு மாநிலங்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும். நீர் இருந்தாலும் அதையும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.ஜூன் முதல் வாரத்தில் மட்டும் தமிழகத்துக்கு 3.3 டி.எம்.சி. நீரை கர்நாடகம் வழங்கியுள்ளது. காவிரி நடுவர்மன்றம் சொன்ன அளவான 2.03 டி.எம்.சியை விட இது அதிகமான நீராகும்.இப்போது தான் கர்நாடகத்தில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. நீர் வரத்தும் அதிகரித்து வருகிறது. இதனால்மழை பொழிவின் அளவு குறித்து இரு மாநிலங்களும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.இரு மாநில விவசாயிகளின் நலனையும் பாதுகாக்கும் வகையில் பிரதமர் நல்ல முடிவை எடுப்பார் என்றுநம்புகிறோம்.வறட்சி காலத்தில் நீரைப் பகிர்ந்து கொள்வது குறித்து நடுவர் மன்றம் சரியான விளக்கம் தரவில்லை. இதனால்அதன் இடைக்காலத் தீர்ப்பை மையமாக வைத்து காவிரி ஆணையத்தை இப்போதைக்குக் கூட்ட வேண்டியஅவசியமில்லை என்றார்.இதையடுத்து பிரதமர் அலுவலம் வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆண்டு கடவுளின் கருணையால் நல்ல மழைபெய்து வருகிறது. காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கும் பொதுவான ஒரு தீர்வை வழங்க முயற்சிமேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
டெல்லி:
பிரதமர் மன்மோகன் சிங்கை கர்நாடக அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழு இன்று சந்தித்தது. அப்போது, காவிரியில்தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்று தமிழகம் குற்றம் சாட்டுவது தவறானது என அவர்கள் சிங்கிடம் கூறினர்.
மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஆஸ்கர் பெர்னாண்டஸ் தலைமையில் 26 எம்.பிக்கள்அடங்கிய குழு இன்று பிரதமரை சந்தித்தது.
இக் குழுவில் முன்னாள் காங்கிரஸ் முதல்வரும், இப்போது பா.ஜ.கவில் இருப்பவரும், தமிழர்களுக்கு எதிராகநடந்த காவிரிக் கலவரத்தில் நல்ல பெயர் எடுத்தவருமான பங்காரப்பா, மத்திய அமைச்சர்கள் முனியப்பா,ரகுமான் கான், ராஜசேகர மூர்த்தி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய ஆஸ்கர் பெர்னாண்டஸ்,
வறட்சி என்றாலும் அதை இரு மாநிலங்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும். நீர் இருந்தாலும் அதையும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
ஜூன் முதல் வாரத்தில் மட்டும் தமிழகத்துக்கு 3.3 டி.எம்.சி. நீரை கர்நாடகம் வழங்கியுள்ளது. காவிரி நடுவர்மன்றம் சொன்ன அளவான 2.03 டி.எம்.சியை விட இது அதிகமான நீராகும்.
இப்போது தான் கர்நாடகத்தில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. நீர் வரத்தும் அதிகரித்து வருகிறது. இதனால்மழை பொழிவின் அளவு குறித்து இரு மாநிலங்களும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இரு மாநில விவசாயிகளின் நலனையும் பாதுகாக்கும் வகையில் பிரதமர் நல்ல முடிவை எடுப்பார் என்றுநம்புகிறோம்.
வறட்சி காலத்தில் நீரைப் பகிர்ந்து கொள்வது குறித்து நடுவர் மன்றம் சரியான விளக்கம் தரவில்லை. இதனால்அதன் இடைக்காலத் தீர்ப்பை மையமாக வைத்து காவிரி ஆணையத்தை இப்போதைக்குக் கூட்ட வேண்டியஅவசியமில்லை என்றார்.
இதையடுத்து பிரதமர் அலுவலம் வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆண்டு கடவுளின் கருணையால் நல்ல மழைபெய்து வருகிறது. காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கும் பொதுவான ஒரு தீர்வை வழங்க முயற்சிமேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
-
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!











Click it and Unblock the Notifications