மாநிலங்களவை தேர்தல் மீதான தடை நீங்கியதுடெல்லி:தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் 65 மாநிலங்களவை எம்.பிக்களைத் தேர்வு செய்வதற்காக நடக்க இருக்கும் தேர்தலுக்குவிதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை உச்ச நீதிமன்றம் விலக்கிக் கொண்டது. இதையடுத்து இன்று மனு தாக்கல் தொடங்குகிறது.குறிப்பிட்ட மாநிலத்தைச் சேர்ந்தவர், அந்த மாநிலத்தில் இருந்து மட்டுமே ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்பட முடியும்என்றிருந்த மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத் திருத்தி, யார் வேண்டுமானாலும் எந்த மாநிலத்தில் இருந்து வேண்டுமானாலும்ராஜ்யசபா எம்.பியாகலாம் என்று அறிவிக்கப்பட்டது.இதை எதிர்த்து, மாநிலங்களவை உறுப்பினர் குல்தீப் நய்யார், முன்னாள் எம்.பி. இந்த்ரஜித் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்தனர்.இதனை விசாரித்த நீதிமன்றம், கடந்த மாதம் 21ம் தேதி நடக்கயிருந்த மாநிலங்களவைத் தேர்தலுக்கு இடைக்காலத் தடைவிதித்தது. இதனால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ராஜ்யசபா தேர்தல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.தேர்தல் நடவடிக்கைகள் துவங்கிய பிறகு நீதிமன்றம் அதில் தலையிடுவது அரசியல் சட்டத்தின் 329 (பி)-வது பிரிவுக்கு எதிரானது,எனவே தேர்தலுக்கு விதித்த தடையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணன், நீதிபதி வெங்கட்ராம ரெட்டி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மாநிலங்களவைத்தேர்தலுக்கு விதித்த தடையை விலக்கிக் கொண்டது.நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிப்பது பொருத்தமாக இருக்காது என்பதால் விலக்கிக் கொள்ளப்படுகிறது. அதே நேரத்தில்,குல்தீப் நய்யார், இந்த்ரஜித் தாக்கல் செய்த மனுக்கள் மீது ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.இப்போதைய தேர்தல் மூலம் நடக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களின் தேர்வு செல்லுமா என்பது இந்த வழக்கின் இறுதித்தீர்ப்பைப் பொறுத்தே அமையும் என்று கூறியுள்ளனர்.இதையடுத்து இன்று ராஜ்யசபா எம்.பி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி, 17ம் தேதி முடிவடைகிறது. போட்டிஇருந்தால் 28ம் தேதி தேர்தல் நடக்கும்.தமிழகத்தில் சட்டமன்றத்தில் உள்ள கட்சிகளின் பலத்தை வைத்து, அதிமுக சார்பில் 4 எம்.பிக்களும், திமுக கூட்டணி சார்பில் இருஎம்.பிக்களும் (அதில் ஒன்று பா.ம.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது) தேர்வு செய்யபடவுள்ளனர். தமிழகத்தில் ராஜ்யசபா எம்.பியாக,34 எம்.எல்.ஏக்களின் வாக்குகள் வேண்டும்.
டெல்லி:
தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் 65 மாநிலங்களவை எம்.பிக்களைத் தேர்வு செய்வதற்காக நடக்க இருக்கும் தேர்தலுக்குவிதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை உச்ச நீதிமன்றம் விலக்கிக் கொண்டது. இதையடுத்து இன்று மனு தாக்கல் தொடங்குகிறது.
குறிப்பிட்ட மாநிலத்தைச் சேர்ந்தவர், அந்த மாநிலத்தில் இருந்து மட்டுமே ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்பட முடியும்என்றிருந்த மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத் திருத்தி, யார் வேண்டுமானாலும் எந்த மாநிலத்தில் இருந்து வேண்டுமானாலும்ராஜ்யசபா எம்.பியாகலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, மாநிலங்களவை உறுப்பினர் குல்தீப் நய்யார், முன்னாள் எம்.பி. இந்த்ரஜித் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்தனர்.
இதனை விசாரித்த நீதிமன்றம், கடந்த மாதம் 21ம் தேதி நடக்கயிருந்த மாநிலங்களவைத் தேர்தலுக்கு இடைக்காலத் தடைவிதித்தது. இதனால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ராஜ்யசபா தேர்தல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.
தேர்தல் நடவடிக்கைகள் துவங்கிய பிறகு நீதிமன்றம் அதில் தலையிடுவது அரசியல் சட்டத்தின் 329 (பி)-வது பிரிவுக்கு எதிரானது,எனவே தேர்தலுக்கு விதித்த தடையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணன், நீதிபதி வெங்கட்ராம ரெட்டி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மாநிலங்களவைத்தேர்தலுக்கு விதித்த தடையை விலக்கிக் கொண்டது.
நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிப்பது பொருத்தமாக இருக்காது என்பதால் விலக்கிக் கொள்ளப்படுகிறது. அதே நேரத்தில்,குல்தீப் நய்யார், இந்த்ரஜித் தாக்கல் செய்த மனுக்கள் மீது ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.
இப்போதைய தேர்தல் மூலம் நடக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களின் தேர்வு செல்லுமா என்பது இந்த வழக்கின் இறுதித்தீர்ப்பைப் பொறுத்தே அமையும் என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து இன்று ராஜ்யசபா எம்.பி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி, 17ம் தேதி முடிவடைகிறது. போட்டிஇருந்தால் 28ம் தேதி தேர்தல் நடக்கும்.
தமிழகத்தில் சட்டமன்றத்தில் உள்ள கட்சிகளின் பலத்தை வைத்து, அதிமுக சார்பில் 4 எம்.பிக்களும், திமுக கூட்டணி சார்பில் இருஎம்.பிக்களும் (அதில் ஒன்று பா.ம.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது) தேர்வு செய்யபடவுள்ளனர். தமிழகத்தில் ராஜ்யசபா எம்.பியாக,34 எம்.எல்.ஏக்களின் வாக்குகள் வேண்டும்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications