ஒரு வாரத்தில் சென்னையில் வீராணம் நீர் விநியோகம்
சென்னை:
சென்னை நகர மக்களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் வீராணம் குடிநீர் விநியோகம் தொடங்கும் எனத் தெரிகிறது.
புது வீராணம் திட்டம் என்ற பெயரில் வீராணம் ஏரியிலிருந்து ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து சென்னை மாநகர குடிநீர்த் தட்டுப்பாட்டை நீக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
வீராணம் ஏரியில் தற்போது தண்ணீர் இல்லாததால், நெய்வேலி அருகே போர்வெல் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு குழாய்கள் மூலம் சென்னை போரூர் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
கடந்த மே 31ம் தேதி முதல் போரூர் ஏரிக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் வரத் தொடங்கியது. ஆனால் இடையில் குழாயில் கசிவு ஏற்பட்டதால் ஜூன் 3ம் தேதி குழாய்கள் மூலம் தண்ணீர் விடுவது நிறுத்தப்பட்டு, கசிவு சரி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 9ம் தேதி முதல் மீண்டும் போரூர் ஏரிக்கு தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது.
இதன் மூலம் போரூர் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்தத் தண்ணீர் ஆழ்குழாய்கள் மூலம் நீரேற்று நிலையத்திற்கு அனுப்பப்பட்டு கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வந்து சேரும். அங்கு தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு இன்னும் ஒரு வாரத்தில் குடிநீர் விநியோகம் தொடங்கும் எனத் தெரிகிறது
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications