568 பேரூராட்சிகளை ஒழித்து தமிழக அரசு உத்தரவு
சென்னை:
தமிழகத்தில் மொத்தம் உள்ள 611 பேரூராட்சிகளில் 568 பேரூராட்சிகள், கிராமப் பஞ்சாயத்துக்களாக தகுதி குறைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 43 பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி, பேரூராட்சிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுவதில்லை. பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி ஆகிய மூன்றடுக்கு பஞ்சாயத்து முறைக்கு மட்டுமே பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி மத்திய அரசு நிதியுதவி செய்து வருகிறது.
இதனால் பேரூராட்சிகளுக்கு போதிய நிதி கிடைப்பதில்லை. இந் நிலையில் இவற்றை கலைத்து விட தமிழக அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில், பேரூராட்சிகளின் வருவாய், வரி வசூல் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு 43 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தியுள்ளது. மற்ற 568 பேரூராட்சிகளும் தரம் குறைக்கப்பட்டு கிராமப் பஞ்சாயத்துக்களாக மாற்றப்பட்டுள்ளன.
இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. தரம் குறைக்கப்பட்ட பேரூராட்சிகளில் பணியாற்றும் ஊழியர்களின் நிலை என்னவாகும் என்று தெரியவில்லை. தரம் குறைக்கப்பட்ட பேரூராட்சிகளுக்கு இனிமேல் மத்திய அரசின் நிதியுதவி கிடைக்கும் என்பதால் அவற்றின் நிர்வாகம் மேம்படும் என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு!











Click it and Unblock the Notifications