1 முதல் 5ம் வகுப்பு வரை இனி எல்லோரும் பாஸ்
சென்னை:
1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை இனி எல்லா மாணவ, மாணவிகளையும் பாஸ் செய்து விடுமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் இளம் மாணவ, மாணவிகள் படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அனைவருக்கும் கல்வி வழங்குவதில் தீவிரமாக உள்ளது எனது அரசு. இளம் குழந்தைகளின் மனதில் தேர்வு என்ற அச்சம் நீங்கி கல்வி கற்றலின் இனிமையை உணரச் செய்ய முடிவு செய்திருக்கிறோம்.
1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் படிப்பிலிருந்து பாதியில் நின்றுவிடுவதைத் தவிர்த்தால் தான் அனைவருக்கும் உயர் கல்வி என்ற நோக்கம் நிறைவேறும்.
இதையடுத்து இந்த இளம் மாணவ, மாணவிகளை தேக்கமின்றி, அதாவது பெயில் ஆக்காமல், தேர்ச்சி அளிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
குறைந்தபட்சம் 75 சதவீத வருகை இருந்தால் மாணவ, மாணவிகளை பாஸ் செய்யப்படுவர். இந்தத் திட்டம் இக் கல்வியாண்டு முதலே அமலுக்கு வரும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
சமீபத்திய மக்களவைத் தேர்தலுக்குப் பின் இன்று முதல் முதலாக தமிழக அமைச்சரவைக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications