குஜராத்: கொல்லப்பட்டது தீவிரவாதிகள் தானா?அகமதாபாத்:குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்ய வந்ததாகச் சொல்லி அம் மாநில போலீசாரால் என்கெளண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பெண் தீவிரவாதியே அல்ல என்று தெரியவந்துள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் குஜராத்தில் ஒரு காரை தாங்கள் மடக்கியதாகவும், அப்போது அதிலிருந்தவர்கள் தங்களை நோக்கி சுட்டதாகவும், தாங்கள் திருப்பிச் சுட்டதில் அந்த நால்வரும் பலியானதாகவும் போலீசார் தெரிவித்தனர்.இந்த நான்கு பேரும் லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் என்றும் போலீசார் கூறினர். கொல்லப்பட்ட இரு ஆண்கள் பாகிஸ்தானியர்கள் என்றும், ஒரு பெண் உள்ளிட்ட இரண்டு பேர் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் குஜராத் போலீசார் கூறினர்.குஜராத் மதக் கலவரத்துக்குப் பழி வாங்க முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்ல அவர்கள் வந்ததாகவும் போலீசார் கூறினர்.ஆனால், சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகளே அல்ல என குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளன.அப்பாவிகளை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளதாகவும், வழக்கமாக தனது முதல்வர் பதவிக்கு பிரச்சனை வரும்போதெல்லாம் இது போன்ற செயல்களில் மோடி இறங்குவது உண்டு என்றும் அம் மாநில காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.மோடியை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்டோர் குரல் தந்து வருவதால், தனது நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்ளவே இந்த போலியான என்கெண்டரை மோடி நடத்தியுள்ளதாக மத்திய அமைச்சரும், முன்னாள் குஜராத் முதல்வருமான வகேலா குற்றம் சாட்டியுள்ளார்.இதற்கிடையே சுட்டுக் கொல்லப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரிந்துள்ளது.இஸ்ரத் என்ற அந்த 19 வயது பெண் மும்பையின் கல்ஷா கல்லூரியில் படித்து வருகிறார். அவருக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இல்லை என மகாராஷ்டிர போலீசார் கூறியுள்ளனர்.கொல்லப்பட்ட தனது மகளின் உடலைப் பெற இஸ்ரத்தின் தாயார் ஷமீமா ஷேக் இன்று அகமதாபாத் வந்தார். தனது மகளுக்கும் தீவிரவாதத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று அவர் கூறியுள்ளார்.தனது மகள் ஏன் குஜராத்துக்கு காரில் போனால் என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ள அவர், ஒருவேளை அவள் கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் என்றார்.
அகமதாபாத்:
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்ய வந்ததாகச் சொல்லி அம் மாநில போலீசாரால் என்கெளண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பெண் தீவிரவாதியே அல்ல என்று தெரியவந்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் குஜராத்தில் ஒரு காரை தாங்கள் மடக்கியதாகவும், அப்போது அதிலிருந்தவர்கள் தங்களை நோக்கி சுட்டதாகவும், தாங்கள் திருப்பிச் சுட்டதில் அந்த நால்வரும் பலியானதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த நான்கு பேரும் லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் என்றும் போலீசார் கூறினர். கொல்லப்பட்ட இரு ஆண்கள் பாகிஸ்தானியர்கள் என்றும், ஒரு பெண் உள்ளிட்ட இரண்டு பேர் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் குஜராத் போலீசார் கூறினர்.
குஜராத் மதக் கலவரத்துக்குப் பழி வாங்க முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்ல அவர்கள் வந்ததாகவும் போலீசார் கூறினர்.
ஆனால், சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகளே அல்ல என குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளன.
அப்பாவிகளை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளதாகவும், வழக்கமாக தனது முதல்வர் பதவிக்கு பிரச்சனை வரும்போதெல்லாம் இது போன்ற செயல்களில் மோடி இறங்குவது உண்டு என்றும் அம் மாநில காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
மோடியை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்டோர் குரல் தந்து வருவதால், தனது நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்ளவே இந்த போலியான என்கெண்டரை மோடி நடத்தியுள்ளதாக மத்திய அமைச்சரும், முன்னாள் குஜராத் முதல்வருமான வகேலா குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கிடையே சுட்டுக் கொல்லப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரிந்துள்ளது.
இஸ்ரத் என்ற அந்த 19 வயது பெண் மும்பையின் கல்ஷா கல்லூரியில் படித்து வருகிறார். அவருக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இல்லை என மகாராஷ்டிர போலீசார் கூறியுள்ளனர்.
கொல்லப்பட்ட தனது மகளின் உடலைப் பெற இஸ்ரத்தின் தாயார் ஷமீமா ஷேக் இன்று அகமதாபாத் வந்தார். தனது மகளுக்கும் தீவிரவாதத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
தனது மகள் ஏன் குஜராத்துக்கு காரில் போனால் என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ள அவர், ஒருவேளை அவள் கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் என்றார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம்












Click it and Unblock the Notifications