அதிமுக: தோற்றார்கள்.. வாரியத் தலைவரானார்கள்
சென்னை:
சமீபத்திய மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியுற்ற15 அதிமுக வேட்பாளர்களுக்கு பல்வேறு வாரியத் தலைவர் பதவிகளை வழங்கி உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
அமைச்சர் பதவிக்கு அடுத்தபடியாக செல்வாக்கு நிறைந்தது வாரியத் தலைவர் பதவி. இதைப் பிடிக்க கடும் போட்டா, போட்டி நிலவும். ஆனால், இம் முறை ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, சில வாரியங்களைத் தவிர மற்றவற்றுக்கு கட்சிக்காரர்களை நியமிக்கவில்லை.
வாரியத் தலைவர் பொறுப்புக்களில் அதிகாரிகளே நியமிக்கப்பட்டனர். இந் நிலையில் சமீபத்திய தேர்தல் மெகா தோல்விக்குப் பின் கட்சிக்காரர்களுக்கு அதிக முக்கியத்துவம் தர ஆரம்பித்துள்ளார்.
கட்சியில் இருந்தும் ஆட்சியின் பலன்களை அனுபவிக்க முடியவில்லை என அதிமுகவினர் சோக கீதம் பாடியதையடுத்து இப்போது வாரியத் தலைவர் பதவிகளில் கட்சியினரை நியமித்துள்ளார்.
இதில் ஹை-லைட்டான விஷயம், 15 வாரியத் தலைவர் பதவிகளுக்கு சமீபத்திய தேர்தலில் தோல்வியடைந்தவர்களை நியமித்துள்ளது தான்.
தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியுற்ற பதர் சயீதுக்கு உடனடியாக வக்ப் வாரியத் தலைவர் பதவியைத் தந்த ஜெயலலிதா, சிறிது கால தாமதத்துக்குப் பின் வட சென்னை மாவட்ட அதிமுகக செயலாளர் பாலகங்காவுக்கு குடிசை மாற்று வாரியத் தலைவர் பதவியைத் தந்தார்.
இந் நிலையில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டுத் தோற்ற எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு சிமென்ட் நிறுவன தலைவராகவும், தஞ்சாவூரில் போட்டியிட்ட தங்கமுத்து தமிழ்நாடு பாட நூல் கழகத் தலைவராகவும்,
திண்டுக்கல்லில் போட்டியிட்ட ஜெயராமன் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார வளர்ச்சிக் கழக தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல மீன் வள வாரியத் தலைவராக திருநெல்வேலியில் போட்டியிட்டுத் தோற்ற அமிர்த கணேசனும், திண்டிவனத்தில் போட்டியிட்ட அருள்மொழித் தேவன் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக சார்பில் போட்டியிட்டுத் தோற்ற மொத்தம் 15 பேர் வாரியத் தலைவர்களாகியுள்ளனர்.
இவர்களைத் தவிர, முன்னாள் எம்.பியான ஆதிராஜாராம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது தென் சென்னை மாவட்ட அதிமுக செயலாளராக இருக்கிறார்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications