செளதி: அமெரிக்கர் தலையை வெட்டி கொலை
ரியாத்:
செளதி அரேபியாவில் அல்-கொய்தாவால் கடத்திச் செல்லப்பட்ட இன்னொரு அமெரிக்கரும் தலையை வெட்டி கொலை செய்யப்பட்டார்.
சமீப காலமாக அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்களைத் தாக்கி வரும் தீவிரவாதிகள், புதிதாக கடத்தல்களிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்களைக் கடத்தி வைத்துக் கொண்டு, சிறையில் இருக்கும் தங்களது போராளிகளை விடுவிக்கக் கோரி கெடு விதித்து வருகின்றனர்.
அந்த வரிசையில், அமெரிக்காவின் ராணுவ ஹெலிகாப்டர் படையின் டெக்னீசியனான பால் ஜான்சன் (49) என்பவரை கடத்திய தீவிரவாதிகள், சிறையில் இருக்கும் தங்களது சக போராளிகளை விடுவிக்காவிட்டால் வெள்ளிக்கிழமை தலையை வெட்டிக் கொல்வோம் என எச்சரித்திருந்தனர்.
அந்த 72 மணி நேர கெடு முடிந்த நிலையில் சொன்னது மாதிரியே ஜான்சனை தீவிரவாதிகள் தலையை வெட்டிக் கொலை செய்துள்ளனர். தலை வெட்டப்பட்ட அவரது படங்களை தங்களது இணையத் தளத்திலும் வெளியிட்டுள்ளனர்.
தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் ஹெலிகாப்டர்களின் துப்பாக்கிச் சூடுகள், ஏவுகணைத் தாக்குதல்களுக்கு உள்ளான முஸ்லீம்கள் சந்தித்த வேதனையை ஜான்சனுக்கும் தந்துள்ளோம் என தீவிரவாதிகள் கூறியுள்ளனர். கடவுள் விரும்பினால் எங்களது இந்தப் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஜான்சனின் படங்களும் தீவிரவாதிகளின் அறிக்கையும் வெளியான அந்த வெப்சைட்டை அமெரிக்க ராணுவம் உடனடியாக தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுவிட்டது. அதை மற்றவர்கள் பார்த்துவிட முடியாமல் தடை செய்துவிட்டது.
கொல்லப்பட்ட ஜான்சனின் உடலையும் தலையையும் ரியாத்துக்கு வெளியே அல்-முனிசியா நகரில் தீவிரவாதிகள் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் ரியாத் அருகே அல்-மலாஸ் பகுதியில் செளதி பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இவர்களில் அப்துல் அஜீஸ் அல் முக்ரின் என்ற தீவிரவாதியும் அடக்கம். இவர் அல்-கொய்தாவின் செளதி அரேபியத் தலைவன் என்று கருதப்படுகிறது.
அமெரிக்கர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருவதால் செளதியில் இருந்து அவர்களில் பெரும்பாலனோர் வெளியேறும் முடிவுக்கு வந்துள்ளனர். செளதி அரேபியாவில் சுமார் 20,000 அமெரிக்கர்கள் உள்ளனர்.
இவர்களில் பெரும்பானோர் பெட்ரோலியத்துறை டெக்னீசியன்கள், எண்ணெய் வர்த்தக அதிகாரிகள். இவர்களைத் தவிர அமெரிக்க ராணுவப் படைகளும் செளதியில் பெரும் எண்ணிக்கையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம்












Click it and Unblock the Notifications