முதல்வரை உளவு பார்க்கும் புதுவை ஆளுநர் !
பாண்டிச்சேரி:
புதுவை முதல்வர் ரங்கசாமியின் ஒவ்வொரு நடவடிக்கையையும் ஆளுநர் என்.என்.ஜா உளவு பார்ப்பதாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது.
புதுவை முதல்வர் ஜா குறித்து காங்கிரஸார் தொடர்ந்து புகார் கூறி வருகிறார்கள். மக்களவைத் தேர்தலின்போது, புதுவை பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட லலிதா குமாரமங்கலத்தை தேர்தல் அதிகாரிக்கு அறிமுகம் செய்து வைத்ததால் ஜா பெரும் சர்ச்சைக்கு ஆளானார்.
இதையடுத்து தற்போது புதுவை முதல்வர் ரங்கசாமியை உளவு பார்ப்பதாக ஆளுநர் மீது காங்கிரஸ் புகார் கூறியுள்ளது. இதுதொடர்பாக திருநள்ளாறு காங்கிரஸ் எம்.எல்.ஏ. கமலக்கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், புதுவை ஆளுநரின் நடவடிக்கைகள் படு மோசமாக உள்ளது.
முதல்வர் ரங்கசாமியின் தொலைபேசியை ஒட்டுக் கேட்குமாறு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். மேலும், முதல்வரின் ஒவ்வொரு நடவடிக்கையையும் உளவு பார்க்க அவர் ஆணையிட்டுள்ளார்.
டெல்லியில் வரும் நாளிதழை விமானம் மூலம் தினசரி புதுவைக்கு வரவழைத்துப் படிக்கிறார் ஆளுநர். அந்த நாளிதழின் விலை ரூ. 5 மட்டுமே, ஆனால் விமானத்தில் வரவழைத்துப் படிப்பதற்கான செலவு ரூ. 236 ஆகும்.
புதுவை ஆளுநரை உடனடியாக மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் இங்குள்ள அரசு நிர்வாகத்தில் அவர் குழப்பம் விளைக்க முயற்சிக்கலாம் என்றார் அவர். புதுவை ஆளுநர் ஜா, பாஜக ஆட்சியின்போது ஆளுநராக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications