31 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம்
சென்னை:
தமிழகத்தில் மாவட்ட கலெக்டர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைத் தொடர்ந்து தற்போது 31 ஐபிஎஸ் அதிகாரிகளும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக உள்துறைச் செயலாளர் சையத் முனீர் ஹோதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வராக முடக்கப்பட்டிருந்த டிஐஜி ஜாங்கிட்டுக்கு, ஐஜியாக பதவி உயர்வு தரப்பட்டு, சென்னை வடக்கு மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
5 கூடுதல் எஸ்.பிக்கள், கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதுதவிர 25க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாநகர ஆணையராக இருந்த சஞ்சய் அரோரா மாற்றப்பட்டு அவருக்குப் பதில் கோவை சரக டிஐஜி அசுதோஷ் முகர்ஜியிடம் கூடுதல் பொறுப்பாக ஆணையர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மதுரை டிஐஜி மாகாளி மாற்றப்பட்டுள்ளார். அவரது பொறுப்பை, மாநகர ஆணையர் விஜயக்குமார் கூடுதலாக கவனித்து வருவார்.
சென்னை வடக்கு மண்டல ஐ.ஜியாக இருந்து வந்த ஏ.சுப்ரமணியன், கோவை மேற்கு மண்டல ஐ.ஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
சமீபத்தில் சென்னை நகர இன்ஸ்பெக்டர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications