மேட்டூருக்கு நீர்வரத்து மேலும் குறைந்தது
சேலம்:
மேட்டூர் அணைக்கு வரும் கபினி நீரின் அளவு மேலும் குறைந்துவிட்டது.
கர்நாடகத்தில் தென் மேற்கு பருவ மழை சூடுபிடித்ததைத் தொடர்ந்து கபினி அணை நிரம்பியது. இதையடுத்து அணையைப் பாதுகாக்க தண்ணீர் திறந்து விட்டது கர்நாடகம்.
இதனால் நீண்ட காலத்திற்குப் பிறகு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த 4 நாட்களாக அணைக்கு நல்ல நீர்வரத்து இருந்து வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயரத் தொடங்கியது.
தற்போது கபினியில் இருந்து அனுப்பப்படும் நீரை கர்நாடகம் வினாடிக்கு 5,000 கன அடியாகக் குறைத்துவிட்டது. இதனால் மேட்டூருக்கு நீர்வரத்து குறையத் தொடங்கியுள்ளது.
நேற்று காலை அணைக்கு விநாடிக்கு 26,892 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. நேற்றிரவு இது விநாடிக்கு 19,751 கன அடியாகக் குறைந்தது. இன்று பிற்பகல் 12 மணி நிலவரப்படி வினாடிக்கு 12, 896 கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டுள்ளது.
மேட்டூரில் கடந்த மூன்று நாட்களில் 2 டிஎம்சி தண்ணீர் அதிகரித்துள்ளது. அணையில் இப்போது மொத்தம் 48.05 அடி நீர் இருப்பு உள்ளது.
இதற்கிடையே, கபினி அணைக்கும் நீர்வரத்து வெகுவாக குறைந்துவிட்டதாக கர்நாடகம் கூறுகிறது. அணைக்கு வினாடிக்கு 13,577 கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருப்பதாக அந்த மாநில அரசு கூறியுள்ளது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications