சகிப்புத் தன்மை இல்லாத பாமக: எச்.ராஜா குற்றச்சாட்டு
சென்னை:
நடிகர் விஜயகாந்த் பொதுவாக கூறிய விமர்சனத்தைக்கூட தாங்க முடியாத பாமக நிறுவனர் ராமதாஸ்,வன்முறையில் இறங்கியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று பாஜக பொதுச் செயலாளர் எச்.ராஜாகூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், எம்.பியாகும் முன்பே அன்புமணி மத்திய அமைச்சரானதுகுறித்து விஜயகாந்த் மிகவும் சாதாரணமாகவே கூறியுள்ளார். இதில் தப்பேதும் இல்லை.
இதற்குப் பதிலளித்த ராமதாஸ், 1952ம் ஆண்டு ராஜாஜி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்படும் முன்பேமுதல்வரானார் என்பதை உதாரணமாகக் காட்டியுள்ளார். ஆனால் அப்போது ராஜாஜி முதல்வராகப் பதவியேற்றதைதிமுக கடுமையாக விமர்சித்தது ராமதாஸுக்குத் தெரியாதா அல்லது அல்லது வசதியாக மறந்து விட்டாரா?
சாதாரண விமர்சனத்தைக் கூட தாங்கிக் கொள்ளும் சகிப்புத் தன்மையற்ற பாமக தமிழகத்தில் எந்த ஊரிலும்விஜயகாந்த் படம் ஓடக் கூடாது என்று தொண்டர்களுக்குக் கட்டளை இட்டுள்ளது. இது பாமகவின் பாசிச,வன்முறைப் போக்கையே காட்டுகிறது.
பதவி வரும்போது பணிவும் வர வேண்டும் என்ற உண்மையை பாமக மறந்து செயல்படுமானால், தமிழக மக்கள்பாமகவுக்கு விரைவிலேயே தக்க பதிலடி கொடுப்பார்கள்.
பாமகவின் மிரட்டல்கள் விஜயகாந்த் என்ற தனி நபருக்கு எதிரானது என்று யாரும் கருதாமல், அனைத்துஜனநாயக சக்திகளும், பாமகவின் இந்த செயலைக் கண்டிக்க முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications