அரசியல் சன்னியாசம்: வாஜ்பாய் மிரட்டல்
மும்பை:
பாஜகவில் கடும் உள்கட்சி மோதல் நிலவி வருவதாலும், தனக்கு அளிக்கப்பட்டு மரியாதை குறைந்துவருவதாலும் மன வருத்தம் அடைந்துள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அரசியல் சன்னியாசம்வாங்கப் போவதாக மறைமுகமாகக் கூறினார்.
குஜராத் மதக் கலவரம் தான் தேர்தல் தோல்விக்கு முக்கியக் காரணம் என்று கூறிய வாஜ்பாய், அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியை மாற்ற வேண்டும் என்றார்.
இதையடுத்து வாஜ்பாயை சங் பரிவார் அமைப்புகள் கடுமையாக சாடி வருகின்றன. மேலும்முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி, கட்சியின் தலைவர் வெங்கையா நாயுடு தரப்பில் இருந்தும்இதற்கு எதிரான கருத்துக்களே வெளிப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் மும்பையில் நடந்து வரும் அக் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்திலும் இந்தமோதல் வெடித்துள்ளது. தன்னுடன் இரவு உணவு அருந்த வருமாறு வாஜ்பாய் விடுத்த அழைப்பைசிவசேனா தலைவர் பால் தாக்கரே நிராகரித்துவிட்டார்.
மேலும் வாஜ்பாயின் எதிர்ப்பையும் மீறி, இனி பாஜக தீவிர இந்துத்துவாவைக் கடைபிடிக்கும்என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந் நிலையில் நேற்றிரவு தேசிய செயற்குழுவில் பேசிய வாஜ்பாய், நடந்ததெல்லாம் போதும்.இதற்கு மேலும் கட்சியை நான் தலைமை தாங்கி நடத்த விரும்பவில்லை. முதல் முறையாக நான்தனிப்பட்ட முறையில் தாக்கப்படுகிறேன் என்றார்.
வாஜ்பாயின் இந்த அறிவிப்பையடுத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.வாஜ்பாயின் இந்த அறிவிப்பால் கூட்டணி சிதையும், கூட்டணிக்குத் தலைமை வகிக்க வாஜ்பாயைவிடச் சிறந்த தலைவர் பா.ஜ.கவில் யாரும் கிடையாது என ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் சரத்யாதவ் கூறியுள்ளார்.
கூட்டணிக்குப் பிரச்சனை உருவாகியுள்ளதையடுத்து பாஜகவின் நிலையில் இன்று காலை மாற்றம்ஏற்பட்டது. கட்சியின் ஒரே பெரும் தலைவர் வாஜ்பாய் தான். அவர் விலக வேண்டிய அவசியமேஇல்லை என அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.
இந் நிலையில் இன்று காலை செயற்குழுக் கூட்டத்தில் மீண்டும் உரையாற்றிய வாஜ்பாய், கட்சியில்பதவிச் சண்டை ஏதும் இல்லை என்றும், அரசியல் சன்னியாசம் வாங்குவேன் என்று நான் பேசியதைபெரிதுபடுத்த வேண்டாம் என்றும் கூறினார்.
அதே நேரத்தில் வாஜ்பாய் விலகுவது நல்லது என வி.எச்.பி கருத்து தெரிவித்துள்ளது.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications