பெரியாறு அணையில் கேரள அதிகாரிகள் ஆய்வு
மதுரை:
முல்லைப் பெரியாறு அணையில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது தொடர்பாக கேரள மாநில நீர்ப்பாசனத் துறைஅதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டதற்கு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடும் கண்டனம்தெரிவித்துள்ளனர்.
கேரள எல்லை அருகே தமிழக பகுதியில் உள்ளது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையில் அதிக நீர் தேக்கிவைப்பதற்கு கேரளம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையே பிரச்சினைஇருந்து வருகிறது.
இந் நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் கேரள நீர்ப்பாசனத் துறை தலைமைப் பொறியாளர் சசிதலைமையிலான அதிகாரிகள் குழு திடீர் சோதனை நடத்தியது.
அணையில் அதிக நீர் தேக்கி வைக்கப்பட்டிருப்பதால் அணையில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதாக கேரளபத்திரிக்கைகளில் வெளியான செய்தியைத் தொடர்ந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளதாக சசிசெய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், முல்லைப் பெரியாறு அணையில் தற்போது 129.02 அடி நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டுஇதே காலத்தில் எவ்வளவு தண்ணீர் இருந்தது என்பதை ஒப்பிட்டுப் பார்ப்போம். நீர்க்கசிவு குறித்து கேரளஅரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
தமிழகத்திற்குள் உள்ள அணையை கேரள அதிகாரிகள் தன்னிச்சையாக ஆய்வு நடத்தியதற்கு தமிழகபொதுப்பணித்துறை அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கேரள அதிகாரிகள் அத்துமீறிநடந்துள்ளனர் என்று அவர்கள் வர்ணித்துள்ளனர்.
சமீபத்தில் கோவை மாவட்டத்தில் மலைப்பகுதியில் கட்டப்பட்டிருந்த தடுப்பு அணைகளை கேரளாவின் பாலக்காடுமாவட்ட ஆட்சித் தலைவரே அத்துமீறி நுழைந்து உடைத்தது குறிப்பிடத்தக்கது. தமிழக எல்லைக்குள் புகுந்து கேரளஅதிகாரிகள் அத்துமீறி நடப்பது அதிகரித்து வருவது தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடையே பெரும்அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications