கடலூரில் பாமக அலுவலகத்திற்குத் தீவைப்பு
கடலூர்:
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் உள்ள பாமக கட்சி அலுவலகத்திற்கு சிலர் தீவைத்தனர். இதற்கு விஜயகாந்த்ரசிகர்கள்தான் காரணம் என்று கூறி பாமக எம்.எல்.ஏ. வேல்முருகன் தலைமையில் தொண்டர்கள் சாலை மறியலில்ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
பாமகவினருக்கும், விஜயகாந்த் ரசிகர்களுக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் வட மாவட்டங்களில் பதற்றம் கூடி வருகிறது.
இந் நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை கடலூர் அருகே உள்ள குறிஞ்சிப்பாடியில் பாமக கட்சிஅலுவலகத்திற்கு சிலர் தீவைத்தனர். இதில் கூரையால் ஆன அந்த அலுவலகம் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
இந்தத் தகவல் பரவியதும் பாமகவினர் அங்கு திரண்டனர். கட்சி எம்எல்ஏ வேல்முருகன் அங்கு விரைந்து வந்தார்.விஜயகாந்த் ரசிகர்கள்தான் இதற்குக் காரணம் என பாமகவினர் முடிவு செய்து குறிஞ்சிப்பாடி-கடலூர் சாலையில்மறியல் போராட்டத்தில் இறங்கினர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நெய்வேலி டி.எஸ்.பி தலைமையில் போலீஸார் திரண்டு வந்தனர்.ஆயுதப்படை போலீஸாரும் குவிக்கப்பட்டனர். சாலை மறியலை கைவிடும்படி எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்களைபோலீஸார் கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர்கள் மறுக்கவே அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதற்கிடையே, குறிஞ்சிப்பாடி கட்சி அலுவலகத்தை எரித்தது தொடர்பாக விஜயகாந்த் ரசிகர் ஒருவரைபாமகவினர் பிடித்து வந்து பஸ் நிலையம் அருகே மின்சாரக் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக உதைத்தனர்.இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்து அந்த நபரை மீட்டனர். அவரது பெயர் வேலாயுதம்என்று கூறப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications