பேச்சுவார்த்தைக்கு தயார்: பாமக அறிவிப்பு
சென்னை:
விஜயகாந்துடனான மோதல் காரணமாக திரைப்படத் துறையினர் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக யாருடனும்பேச்சுவார்த்தை நடத்த பாமக நிறுவனர் ராமதாஸ் தயாராக இருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாமக பொதுச் செயலர் மூக்கையா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
பாமகவோ, ராமதாஸோ திரைப்படத் துறையினருக்கு எந்த வகையிலும் எதிரி அல்ல. ஆனால் இளைஞர்களைசீரழிக்கும் கருவியாக சினிமா மாறக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
சினிமா நடிகர்களை ரசிக்கலாம்; ஆனால் பூஜிக்க வேண்டுமா என்றுதான் இளைஞர்களை ராமதாஸ் கேட்கிறார்.மும்பை போன்ற நகரங்களில் அரசியல் தலைவரைப் பற்றி தாறுமாறாகப் பேசினால் என்ன நடக்கும் என்பதுசினிமாத் துறையினருக்குத் தெரியாததல்ல.
யாரோ ஒருவர் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்று விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் பேசுகிறார்கள்.சிலரின் தனிப்பட்ட கருத்துகள் பாமக தொண்டர்களின் மனதை புண்படுத்துவதை அவர்கள் ஏன்கண்டிக்கவில்லை?
தமிழ்த் திரைப்படத் தொழில் நசிந்துவிடக்கூடாது என்பதில் அதிக அக்கறையுள்ளவர் ராமதாஸ்.
எனவே சிலரின் தனிப்பட்ட கருத்துகளால் திரைப்படத் தொழில் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக யாரோடும்வெளிப்படையாகப் பேச்சுவார்த்தை நடத்த ராமதாஸ் தயாராகவே இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications