ராமதாஸுக்கு ஃபெப்சி கோரிக்கை
சென்னை:
லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட திரைப்படத் துறைக்கு பாதகம் ஏற்படும் வகையில்பாட்டாளி மக்கள் கட்சி நடந்துகொள்ளக் கூடாது என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கு தென்னிந்தியதிரைப்பட ஊழியர்கள் சம்மேளனம் (ஃபெப்சி) கோரிக்கை விடுத்துள்ளது.
ஃபெப்சி அமைப்பின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்திற்குப் பின் ராமதாஸுக்குக்கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அந்த கடிதத்தின் நகலில் கூறப்பட்டுள்ளதாவது:
ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் படத்தை வெளியிடுவது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி பிரச்சினைகள்செய்தது. தற்போது நடிகர் விஜயகாந்த்தின் படங்களை தடை செய்வோம் என பாமக கூறியுள்ளது அதிர்ச்சிதருகிறது.
உங்களது மிரட்டல்களினால், திரைப்படத் துறையைச் சேர்ந்த அனைத்துப் பிரிவினரும் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே தமிழ் திரைப்படத் துறை தடுமாற்றத்தில் உள்ளது. திருட்டு விசிடி, டிவிடி, படப்பிடிப்புகள் வெளிமாநிலங்களுக்கு போய் விட்டது என பல பிரச்சினைகளினால் தமிழ்த் திரையுலகம் தத்தளித்து வருகிறது.
இந் நிலையில் பாமகவின் நடவடிக்கை, லட்சக்கணக்கான குடும்பங்கள் ஈடுபட்டுள்ள திரைப்படத் துறையின்அழிவுக்கே வித்திடும். எனவே நடிகர்களுக்கு எதிரான போக்கு, திரைப்படங்களைத் தடுப்பது போன்றசெயல்களிலிருந்து பாமகவினர் விலகியிருக்க வேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications