பா.ம.க.-திமுக மோதல்: எம்.பி மீது செருப்பு வீச்சு
தர்மபுரி:
பென்னாகரம் ஒன்றியத்துக்கு தலைவரைத் தேர்ந்தெடுக்க நடந்த தேர்தலில் பெரும் கலாட்டா நடந்தது. பா.ம.க.எம்பியான செந்தில் மீது கூட்டணிக் கட்சியான திமுகவினர் செருப்புகளை வீசி பரபரப்பை ஏற்படுத்தினர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இந்த ஒன்றியக் குழுவில் அதிமுகவைச் சேர்ந்த அன்பழகன் தான் தலைவராகஇருந்து வந்தார். அதிமுகவிலிருந்து இருந்து சமீபத்தில் அன்பழகன் நீக்கப்பட்டதால், துணைத் தலைவரானபா.ம.கவைச் சேர்ந்த தவமணி, தலைவர் பொறுப்பு வகித்து வந்தார்.
இந் நிலையில் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்த நடந்த முயற்சிகள் திமுக, பா.ம.கவினர் மோதலால் இருமுறைஒத்தி வைக்கப்பட்டன. கமிஷன், காண்ட்ராக்ட் வேலைகள் ஆகியவற்றை ஒதுக்குவதில் ஒன்றியக் குழுத்தலைவருக்கு முக்கிய அதிகாரம் உண்டு.
இதில் நன்றாக கட்டிங் அடிக்கலாம் என்பதால் பதவியைப் பிடிக்க இரு கட்சியினரும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந் நிலையில், நேற்று தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டது.
அரசு அதிகாரியின் முன்னிலையில், தலைவர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த பெரியண்ணன், பா.ம.கவைச் சேர்ந்ததவமணி, சுயேச்சையாக ஒருவரும் போட்டியிட்டனர்.
தேர்தல் நடக்க இருந்த நிலையில் திமுக, பா.ம.கவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
தேர்தலைப் பார்வையிட வந்த தர்மபுரி பா.ம.க. எம்.பியான செந்திலின் கார் மீது திமுகவினர் செருப்புகளைவீசினர். செருப்புகள் காரில் பட்டு விலகி பா.ம.க எம்.எல்.ஏவான பாரிமோகன் மீது விழுந்தன.
இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் திமுகவினரை நோக்கி நா கூச வைக்கும் வார்த்தைகளால் திட்டினர்.திமுகவினரும் திருப்பித் திட்டினர். இதையடுத்து இரு தரப்பினரும் அடித்துக் கொள்ள முயன்றனர்.
இதைத் தொடர்ந்து எம்.பியான செந்தில் காரில் ஏறிப் பறந்துவிட்டார். கலாட்டா வெடிக்கும் சூழ்நிலைஏற்பட்டதையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்து இரு தரப்பினரையும் கலைந்து போகச் செய்தனர்.
கூட்டணிக் கட்சிகளாக பா.ம.க.- திமுக இடையே ஏற்பட்ட இந்த மோதல் அப் பகுதியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications