புதிய தலைமை செயலகம் கட்டுவதில் ஜெ. தீவிரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மக்களவைத் தேர்தல் தோல்வியையடுத்து புதிய தலைமைச் செயலகம் கட்டும் பணியை கொஞ்சம் ஒத்தி வைத்ததமிழக அரசு இப்போது மீண்டும் அந்த வேலைக்கு உயிர் கொடுத்துள்ளது.

தலைமைச் செயலகம் கட்ட சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ) மூலமாக டெண்டர்களை அரசுகோரியுள்ளது.

கடற்கரை மீனவர் குப்பம், ராணி மேரிக் கல்லூரி உள்ளிட்ட சில இடங்களில் புதிய தலைமைச் செயலகம் கட்டமுதல்வர் ஜெயலலிதா எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

மீனவர்கள் எதிர்ப்பு, மாணவிகள் எதிர்ப்பால் இத் திட்டங்கள் நிறைவேறவில்லை. இதையடுத்து கடலோரத்தில்கட்டடம் கட்டவும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களை இடிக்கவும் தடை போட்டார் அப்போதையமத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு.

மேலும் 1,000 பேருக்கு மேல் பணியாற்றும் கட்டடங்கள் கட்ட, ரூ. 50 கோடிக்கு மேல் முதலீட்டில் கட்டடம் கட்டமத்திய அரசின் அனுமதி தேவை என்ற உத்தரவும் போட்டார்.

இதையடுத்து தமிழக அரசுக்குச் சொந்தமான அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தலைமைச் செயலகம் கட்டமுடிவு செய்து, அதற்காக சில விடுதிகள், பல்கலைக் கட்டடங்களை இடிக்க முடிவு செய்யப்பட்டது.

மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதியைப் பெறாமலேயே தலைமைச் செயலகம் கட்ட பூமி பூஜை போட்டார்முதல்வர் ஜெயலலிதா.

இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும் அரசுக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது.

இந் நிலையில் மக்களவைத் தேர்தலில் வீசிய எதிர்ப்பலையை மனதில் கொண்டு இத் திட்டத்தை கொஞ்சமாய் ஒத்திபோட்டார் முதல்வர். இப்போது அந்தப் பணிகளை மீண்டும் முடுக்கிவிட்டுள்ளார்.

தலைமைச் செயலகம் கட்டுவதற்கான டெண்டர் கோரி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ.பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிட்டுள்ளது.

கோட்டூர்புரத்தில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 43 ஏக்கரில் 5 மாடிகள் கொண்ட கட்டடம் கட்ட,டெண்டர்களை சமர்பிக்கலாம் என அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 43 ஏக்கரில் 2 மில்லியன் சதுர அடியில் கட்டுமானப் பகுதி இருக்கும் என்றும் அதில்கூறப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுமானப் பணியை மேற்கொள்ளத் தயாராக இருக்கும் கட்டுமான நிறுவனங்கள் தங்களதுடெண்டர்களை ஆகஸ்ட் 6ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்றும் விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து உயர் அதிகாரிகளிடம் விசாரித்தபோது, புதிய தலைமைச் செயலகம் கட்டுவதில் முதல்வர் தீவிரமாகஇருக்கிறார். 18 மாதங்களில், அதாவது ஒன்றரை ஆண்டுகளில், இதைக் கட்டி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதுஎன்றனர்.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக்கு இன்றும் 2 வருடங்கள் தான் பதவிக் காலம் உள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது. இதனால் தனது இந்த ஆட்சி காலத்துக்குள்ளாகவே தலைமைச் செயலகத்தைக் கட்டி, அதில்அலுவலகங்களை இடமாற்றிவிடுவதில் முதல்வர் மும்முரமாக இருப்பதாகத் தெரிகிறது.

இந்தத் திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை தமிழக அரசு இன்னும் பெறவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.

இப்போதைய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக திமுகவைச் சேர்ந்த ராஜா, இதற்கு அனுமதி தருவார் என தமிழகஅரசு நம்பவில்லை. இதனால் தான் அனுமதி கோரி இன்னும் கடிதம் கூட அனுப்பப்படவில்லை என்று தெரிகிறது.

மத்திய அரசின் அனுமதி இல்லாமலேயே கட்டடத்தை தமிழக அரசு கட்டும் என்று தெரிகிறது. இதை சுற்றுச்சூழல் துறை தடுத்தால்,தலைமைச் செயலகத்தை மையமாக வைத்து திமுக- அதிமுக இடையே அடுத்த சுற்று அரசியல் மோதல் தொடங்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+