குட்டி சாமியாருக்கு மதுரை ஆதீனம் ஆதரவு
சேலம்:
சேலம் குட்டிச் சாமியார் பரணீதர சுவாமிகள் தனது ஆன்மீகப் பணியை தொடரலாம் என்று மதுரை ஆதினம் தேசிகபரமாச்சாரிய சுவாமிகள் கூறியுள்ளார்.
தமிழகத்தை சமீப காலமாக பெரும் பரபரப்பில் ஆழ்த்தி வரும் சேலம் குட்டிச் சாமியார் பரணீதரனுக்கும் அவரதுபெற்றோருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
தங்களது மகன் தங்களுடன்தான் வசிக்க வேண்டும் என்று பெற்றோர் கண்ணீருடன் கூறி வருகின்றனர். ஆனால்,ஆன்மீகம்தான் எனக்கு முக்கியம், வேண்டுமானால், பெற்றோர் என்னுடன் வந்து சிஷ்யர்களாக தங்கிக்கொள்ளலாம் என்று குட்டிச் சாமியார் கூறி வருகிறார்.
குட்டிச் சாமியாரை வைத்து பணம் சம்பாதித்து வரும் கூட்டமும் ஆஸ்ரமும் சேர்ந்து அவரை பெற்றோரிடம் இருந்துபிரிக்க முயல்வதாகவும், குட்டிச் சாமியாரை வைத்து பணம் ஈட்ட பெற்றோர் முயல்வதாகவும் குற்றச்சாட்டுகள்கூறப்படுகின்றன.
இந்த சர்ச்சை தொடர்ந்து வரும் நிலையில், மதுரை ஆதீனம் சேலம் வந்தார்.
அங்கு குட்டிச் சாமியாரை சந்தித்த ஆதினம், அவரது சிறு வயது ஆன்மீக உணர்வைப் பாராட்டினார். பின்னர்குட்டிச் சாமியாருக்கு சால்வை போர்த்தி நடராஜர் சிலையைக் கொடுத்தார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் ஆதினம் பேசுகையில், பரணீதர சுவாமிகள் தனது ஆன்மீகப் பணியைத்தொடருவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவருடன் பெற்றோரும் தங்கிக் கொள்ளலாம்.
கோர்ட் என்ன உத்தரவு பிறப்பித்தாலும், பரணீதர சுவாமிகள் தனது ஆன்மீகப் பணியை கைவிட மாட்டார்.
மதுரை ஆதீனத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தனியாக ஆசிரமம் அமைத்தும் பரணீதர சுவாமிகள்செயல்படலாம் என்றார் மதுரை ஆதீனம்.
மதுரை ஆதீனத்துக்கு முன்பாகவே குட்டி சாமியாரின் சீடர்களுக்குள் அடிதடி ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டும், கொன்று விடுவேன் என்றும் மிரட்டிக் கொண்டனர்.
முன்னதாக குட்டிச் சாமியாருக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே சமாதானம் செய்து வைக்க ஆதீனம்முயன்றார். இதற்காக இரு தரப்பிடமும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அது பலன்அளித்தாகத் தெரியவில்லை.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications