வெங்கடாசலய்யா-பத்மவிபூஷன்: பாரதிராஜா-பத்மஸ்ரீ
டெல்லி:
முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் மனித உரிமை கமிஷன் தலைவருமான வெங்கடாசலய்யாவுக்குபத்ம விபூஷன் விருதை ஜனாதிபதி கலாம் இன்று வழங்கினார்.
தமிழகத்தைச் சேர்ந்த பரத நாட்டியக் கலைஞர் அலர்மேல் வள்ளி, வீணைக் கலைஞர் மதுரை சேஷகோபாலன்,இயக்குனர் பாரதிராஜா மற்றும் பாடகர் ஹரிஹரன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.
ஜனாதிபதி மாளிகையின் தர்பார் மண்டபத்தில் நடந்த வண்ணமயமான விழாவில் இந்த விருதை கலாம்வழங்கினார்.
பிரபல எழுத்தாளரும், கவிஞருமான அம்ரிதா பிரீதம், ஜோதிட விற்பன்னர் விஷ்ணு நராலிகர் ஆகியோருக்கும்பத்ம விபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவர்கள் விழாவுக்கு வரவில்லை.
இந்தித் திரைப்பட இயக்குனர் குல்ஷார், பரத நாட்டியக் கலைஞர் அலர்மேல் வள்ளி, பொருளாதார நிபுணர்ஹனுமந்த ராவ், விஞ்ஞானி பத்மநாபன், மூத்த பத்திரிக்கையாளர் காமத், வீணை கலைஞர் மதுரைசேஷகோபாலன், சமூக சேவகி பூர்ணிமா அர்விந்த் 19 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளையும் கலாம் வழங்கினார்.
இயக்குனர் பாரதிராஜா, கிரிக்கெட் வீரர்கள் கங்குலி, திராவிட், பாடகர் ஹரிஹரன், இந்தி நடிகர் அனுபம் கெர்உள்ளிட்டோருக்கு ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.
முன்னாள் ஜப்பான் பிரதமர் யோஷிரோ மோரிக்கும் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்விழாவில் பங்கேற்கவில்லை.
விருது பெற்றவர்களில் 15க்கும் மேற்பட்டவர்கள் வயதில் மிகவும் மூத்தவர்கள் என்பதால், அவர்களைசிரமப்படுத்தி மேடைக்கு அழைக்காமல் தானே மேடையை விட்டு 15 முறை கீழிறங்கி வந்து விருதுகளைவழங்கினார் கலாம்.
நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா இந்த ஆண்டு யாருக்கும் வழங்கப்படவில்லை.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications