பலத்த பாதுகாப்புடன் இன்று கண்டதேவி தேரோட்டம்
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி அருள்மிகு சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் இன்றுமிக பலத்த பாதுகாப்புடன் நடக்கவுள்ளது.
கண்டதேவி கோவில் தேரோட்டத்தில் தலித் சமுதாயத்தினர் கலந்து கொள்ள கள்ளர் சமூகத்தினர் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.
தாங்களும் தேரின் வடம் பிடித்து இழுக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என தலித் மக்கள் போராடி வருவதால், பலத்த பதற்றம்ஏற்பட்டு, கடந்த சில ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை.
ஒரு முறை துப்பாக்கிச் சூடு நடக்கும் அளவுக்கு கலவரம் வெடித்தது. இந் நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில்அமைக்கப்பட்ட அமைதிக் குழுவினர் இந்த ஆண்டு கோவில் திருவிழா தொடர்பாக இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்திஉடன்பாடு கண்டனர்.
இதைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்றுநடக்கிறது.
இதையொட்டி அங்கு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண்டதேவி முழுவதும் ஆயுதம் தாங்கிய போலீஸார்பாதுகாப்பு நிறுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பக்தர்களைக் கண்காணிக்க பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. எந்தவித அசம்பாவிதசம்பவும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு போலீஸார் உஷார் நிலையில் உள்ளனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications