சிபிஐ நீதிமன்றத்தில் காளிமுத்து ஆஜராக உத்தரவு
சென்னை:
வங்கிகளில் பல கோடி கடன் மோசடி செய்ததாக தொடரப்பட்ட ராபின் மொயின் வழக்கில் சபாநாயகர் காளிமுத்து ஜூலை 20ம் தேதிசிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1984ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த ராபின் மொயின் என்பவர் பல்வேறு வங்கிகளில் போலியான ஆவணங்களைக் கொடுத்து பலகோடி அளவுக்கு கடன் வாங்கினார். இதை அவர் திரும்பத் தராததால் அவர் மீது வங்கிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
பின்னர் இந்த வழக்கை சிபிஐ ஏற்றது. அப்போது அமைச்சராக இருந்த காளித்துவுக்கும் இந்த மோசடியில் தொடர்பு உள்ளதாககூறப்பட்டதால் அவரும் ஒரு முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணைக்கு அவர் நேரில் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம்உத்தரவிட்டது.
இந் நிலையில் ஜூன் 30ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு பெற்றார் காளிமுத்து.
இன்று சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காளிமுத்து வரும் 20ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவேண்டும் என்று நீதிபதி ராமசாமி உத்தரவிட்டார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications