நீதிமன்றத்தில் அமளி: திருச்சியை அடித்த சென்னை!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திருச்சி மாவட்டத்தை மதுரை உயர் நீதிமன்றக் கிளையுடன் இணைக்கக் கோரி தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியிடம் மனு கொடுக்கக்காத்திருந்த திருச்சி வழக்கறிஞர்களை, சென்னை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பிரபாகரனும் அவரது ஆதரவு வழக்கறிஞர்களும்அடித்து, உதைத்தனர்.

மதுரை உயர் நீதிமன்றக் கிளையுடன் திருச்சி மாவட்டத்தையும் சேர்க்கக் கோரி திருச்சி, தஞ்சை, கரூர் மாவட்ட வழக்கறிஞர்கள்காலவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதே நேரத்தில் மதுரை கிளைக்கு அதிக மாவட்டங்களை ஒதுக்கக் கூடாது என்று சொல்லி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களும்காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந் நிலையில், தங்களது கோரிக்கையை நீதிபதி சுபாஷன் ரெட்டியை நேரில் சந்தித்து வலியுறுத்த, திருச்சி வழக்கறிஞர்கள் சங்கப்பிரதிநதிகள் சென்னை வந்தனர்.

இன்று காலை தலைமை நீதிபதியை சந்திக்க அவரது அறை முன் காத்திருந்தனர். அப்போது சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் பிரபாகரன் தலைமையிலான வழக்கறிஞர்கள் 50 பேர் அங்கு வந்தனர்.

இங்கு நிற்கக் கூடாது கலைந்து செல்லுங்கள் என்று கூறி திருச்சி வழக்கறிஞர்களின் கவுனை பறித்துக் கிழித்தனர், பின்னர் அவர்களைசரமாரியாகத் தாக்கினர்.

இதனால் நிலை குலைந்த திருச்சி வழக்கறிஞர்கள் அங்கிருந்து கலைந்து ஓடினர்.

பின்னர் இத் தாக்குதல் குறித்து தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியிடம் அவர்கள் புகார் அளித்தனர்.

இது குறித்து திருச்சி வழக்கறிஞர் சங்கச் செயலாளர் இளகுரு செய்தியாளர்களிடம் பேசுகையில், இதுபோன்ற அராஜக வழக்கறிஞர்களைநான் எங்குமே பார்த்ததில்லை என்றார்.

தலைமை நீதிபதியின் அறை வாசலிலேயே வழக்கறிஞர்களை பிரபாகரன் தலைமையிலான வழக்கறிஞர்கள் தாக்கியது நீதிமன்றவளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை வழக்கறிஞர்கள் எச்சரிக்கை:

இதற்கிடையே, மதுரை உயர் நீதிமன்றக் கிளைக்கு 5ம் தேதிக்குள் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்காவிட்டால், சாலை மறியல்உள்ளிட்ட கடுமையான போராட்டங்களில் ஈடுபடப் போவதாக மதுரை வழக்கறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+