கருணாநிதியுடன் சென்னை வழக்கறிஞர்கள் சந்திப்பு
சென்னை:
மதுரை உயர் நீதிமன்றக் கிளை எல்லைப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண உதவுமாறு திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து சென்னைஉயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையில் அமையவுள்ள உயர்நீதிமன்றக் கிளைக்கு அதிக மாவட்டங்களை ஒதுக்கக் கூடாது என்று சொல்லி சென்னை உயர் நீதிமன்றவழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பதிலுக்கு மதுரை வழக்கறிஞர்களும் போராட்டம் நடத்துகின்றனர்.
இந் நிலையில் இப்பிரச்சினையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் பெருமை பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு கோரி தலைமைநீதிபதி சுபாஷன் ரெட்டியை அணுகினர் சென்னை வழக்கறிஞர்கள்.
ஆனால் இதில் தான் தலையிட முடியாது என்று சுபாஷன் ரெட்டி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
இந் நிலையில், கருணாநிதியை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பிரபாகரன் தலைமையிலான குழுவினர்சந்தித்தனர்.
பின்னர் பிரபாகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களது கோரிக்கையை பரிசீலித்து சுமூக தீர்வு ஏற்பட முயற்சிப்பதாக கருணாநிதிதெரிவித்தார். இதேபோல, முதல்வர் ஜெயலலிதா, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோரையும் சந்தித்து கோரிக்கை விடுக்கவுள்ளோம்என்றார்.
மத்திய சட்டத்துறை இணையமைச்சராக திமுகவைச் சேர்ந்த வேங்கடபதி இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications