ஆகஸ்டில் தான் கும்பாபிஷேகம்: அரசு அறிவிப்பு
சென்னை:
ஜோதிடரின் அறிவுரைப்படி நிறுத்தப்பட்ட 16 கோவில்களின் கும்பாபிஷேகத்தை நடத்த தமிழக அரசு இன்றுஅனுமதியளித்துள்ளது. ஆனால், அதை ஆகஸ்ட் 22ம் தேதி நடத்துமாறு அரசு கூறியுள்ளது.
அதே நேரத்தில் மேலும் 5 கோவில்களுக்கான கும்பாபிஷேகத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடத்துமாறுஉத்தரவிட்டுள்ளது.
இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுஅதற்கான ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டன. இந் நிலையில் இந்த கும்பாபிஷேகங்களை தமிழக அரசுதிடீரென நிறுத்தி வைத்தது.
இப்போது முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேரம் சரியில்லை என்றும், கும்பாபிஷேகங்கள் நடந்தால் அது ஆட்சிக்குஉலை வைக்கும் என்றும் போயஸ் கார்டனின் ஆஸ்தான ஜோதிடர் அறிவுறுத்தியதால் அவை ஒத்திவைக்கட்டதாகத் தெரிகிறது.
இதற்கு இந்து முன்னணி உள்பட பல்வேறு அமைப்புகளிடம் இருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதையடுத்துஅவர்களை அமைதிப்படுத்தும் வகையில் 11 கோவில்களுக்கான கும்பாபிஷேகத்துக்கான நாளை அரசுஅறிவித்துள்ளது.
ஆனால், இந்த கும்பாபிஷேகங்கள் உடனடியாக நடைபெறப் போவதில்லை. வரும் ஆகஸ்ட் மாதம் 22ம் தேதிதான் நடத்தப்படவுள்ளன.
குளங்கள் தூர் வாரும் பணி உள்ளிட்ட பல வேலைகள் முடிவடையாமல் இருப்பதாகவும், அதற்கு போதிய காலஅவகாசம் தந்து ஆகஸ்டில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று அறநிலையத்துறைவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகத்துக்கு கோவில்கள் தயார் நிலையில் இருக்க, முதல்வரின் நல்ல நேரத்துக்காக, அதை மேலும்இரண்டு மாதங்களுக்கு அரசு தள்ளி வைத்துள்ளது பக்தர்களை எந்த அளவுக்கு அமைதிப்படுத்தும் என்றுதெரியவில்லை.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications